[ad_1]
ஒகி புயலால் பாதிக்கப்பட்டு லட்சத்தீவில் கரை ஒதுங்கியிருந்த தமிழக மீனவர்கள் 45 பேரை, இந்தியக் கடற்படையினர் பத்திரமாக மீட்டு கொச்சின் துறைமுகத்துக்கு அழைத்துவந்தனர்.
கடந்த நவம்பர் 30-ம் தேதி, குமரி மாவட்டத்தைப் புரட்டிப்போட்ட ஒகி புயலின் தாக்கத்திலிருந்து குமரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளவில்லை. புயலின்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான படகுகளையும் அதில் இருந்த மீனவர்களையும் புயல் இழுத்துச்சென்றது. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்டுவருகின்றனர். அத்துடன், மகாராஷ்டிரா, குஜராத், லட்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் கரை ஒதுங்கி இருக்கின்றனர்.
இது தவிர, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1013 மீனவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். காணாமல்போன மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துவருகிறது. இதை வலியுறுத்தி, மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 45 மீனவர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டு, கொச்சின் துறைமுகத்துக்கு அழைத்துவந்தனர்.
நெல்லை, குமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்மூலமாக கொச்சின் துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக அரசின் சார்பாக அவர்களுக்கு வழிச்செலவுக்காக ரூ.2000 வழங்கப்பட்டது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண்ராய், மீனவர்களுக்கு பணம் வழங்கினார். அவர்கள், உடனடியாக சொந்த ஊருக்குச் செல்லவும் ஏற்பாடுசெய்யப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒகி புயலில் கடலில் தத்தளித்த 45 தமிழக மீனவர்கள் கொச்சி வந்தனர்!
TAGS :
COMMENTS