[ad_1]

Chennai: 

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு 2017 டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தில் இதுவரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களை விடவும், தற்போது நடைபெறவிருக்கும் தேர்தல் முன்னெப்போதும் இல்லாமல் அம்மாநில மக்களிடமும், ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டு, 1960-ம் ஆண்டில்தான் முதல்முறையாகத் தேர்தல் நடைபெற்றது. 1967 மே 12 வரை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஜீவராஜ் மேத்தா அம்ரேலி, பல்வந்தராய் மேத்தா, ஹிதேந்திர கனையாலால் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். 

1971 மே 12 முதல் 1972 மார்ச் 17 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. 1972 முதல் 1974 பிப்ரவரி மாதம் வரை காங்கிரஸ் கட்சியின் கன்ஸ்யாம் ஓசா, சிமன்பாய் படேல் இருவரும் முதல்வர்களாக இருந்தனர். 1974 முதல் 1975 ஜூன் வரை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி குஜராத்தில் அமலில் இருந்தது. 



1975 ஜூன் முதல் 1976 மார்ச் வரை ஜனதா முன்னணி சார்பில் பாபுபாய் ஜஷ்பாய் படேல் முதல்வர் பதவி வகித்தார். தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு அதாவது 1976 டிசம்பர் 24 வரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது. பின்னர் 1976-77ல் காங்கிரஸின் மாதவ்சிங் சோலங்கி, தொடர்ந்து 1980-ம் ஆண்டுவரை ஜனதா கட்சியின் பாபுபாய் ஜஷ்பாய் படேல், மீண்டும் மூன்றாண்டுகள் வரை முதல்வர் பதவியில் இருந்தார்.

நான்கு மாத காலம் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று, 1980 முதல் 1989-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. இருமுறை நடைபெற்ற ஆட்சிக்காலத்தில், முதலில் மாதவசிங் சோலங்கி மற்றும் அமர்சிங் செளத்ரி முதல்வர்களாக இருந்தனர். 

1990 முதல் 1994-வரையிலான காலகட்டத்தில் ஜனதா தளம்-பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியும், 1995-ல் காங்கிரஸுடன் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த அணியும் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்தன. சிமன்பாய் படேல் முதல்வராக இருந்தார். பின்னர் சில மாதங்கள் காங்கிரஸின் சி. மேத்தா முதல்வரானார்.

இதையடுத்து 1995-ல் பி.ஜே.பி. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது. கேசுபாய் படேல், சுரேஷ் மேத்தா முதல்வராகப் பதவி வகித்தனர். ஓராண்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் சங்கர்சிங் வகேலா, திலீப் பாரிக் ஆகியோர் 1998-ம் ஆண்டுவரை முதல்வர்களாக இருந்துள்ளனர். 

குஜராத்தில் 1998-ம் ஆண்டுக்குப் பின் தற்போது வரை பி.ஜே.பி-யே ஆட்சியில் இருந்து வருகிறது. இதில் நான்கு முறை முதல்வர் பதவியை ஏற்று, அதிக நாள்கள் குஜராத் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி. 

மோடி 2014-ல் பிரதமராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஆனந்திபென் படேல் குஜராத் முதல்வரானார். இரண்டாண்டுகள் அவர் பதவி வகித்த நிலையில், அவரின் செயல்பாடுகள் சரியில்லாததால், விஜய் ரூபானி முதல்வரானார். 

குஜராத் மாநிலத்தில் தற்போது நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றிபெற்றால், விஜய் ரூபானியே முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பலவிதமாக வந்தபோதிலும் குஜராத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது இம்மாதம் 18-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்குப் பின் தெரிந்து விடும்...(களம் விரியும்...)

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");