[ad_1]
ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹிந்த்வாரா மாவட்டத்தின் யுனிசோ கிராமத்தில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தகவலை, ஜம்மு-காஷ்மீர் டி.எஸ்.பி., எஸ்.பி.வாய்ட் உறுதிப்படுத்தினார். கடும் பனிப்பொழிவிலும் இரவு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த தேடுதல் வேட்டியை ஜம்மு-காஷ்மீர் போலீஸ், ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸார் ஆகியோர் இணைந்து மேற்கொண்டதாகவும் எஸ்.பி.வாய்ட் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். அருகிலிருக்கும் காட்டுக்குள் மேலும் சிலர் பதுங்கியிருக்கக்கூடும் என்பதால், தேடுதல் வேட்டையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் விடியவிடிய துப்பாக்கிச் சண்டை! 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
TAGS :
COMMENTS