[ad_1]
கொலை வழக்கில் மும்பை தப்பிச்சென்ற சென்னை வாலிபர் தஷ்வந்த்தைக் கைதுசெய்த தமிழக போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இன்றிரவு, தஷ்வந்த்தை காவல்துறையினர் சென்னை அழைத்துவருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த சிறுமி ஹாசினியை, தஷ்வந்த் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்தார். இந்தக் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக்கோரியும் ஜாமீன் வழங்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தஷ்வந்த் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்ததோடு, ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில், குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இதனிடையே, தாய் சரளாவைக் கொலைசெய்த தஷ்வந்த், கடந்த 2-ம் தேதி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தேடிவந்தனர். இதனிடையே, மும்பையில் இருப்பதாகத் தகவல் தரவே, அங்கு விரைந்தது தனிப்படை போலீஸ். தஷ்வந்த் தலைமறைவாக இருந்த இடத்தைக் கண்டுபிடித்த காவல்துறையினர், அவரை கைதுசெய்தனர். சென்னை கொண்டு வர மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, போலீஸ் பிடியிலிருந்து தப்பினார். அவரைத் தேடிவந்த நிலையில், அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்வந்த்தை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இதையடுத்து, மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்த்தை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, போலீஸ் காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தஷ்வந்த்தை இன்றிரவு சென்னை கொண்டுவர காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
3 நாள் போலீஸ் கஸ்ட்டடி! மும்பையிலிருந்து சென்னை கொண்டுவரப்படுகிறார் தஷ்வந்த்
TAGS :
COMMENTS