[ad_1]





Coimbatore: கோவை தங்கப்பட்டறையில், கழிவுநீர்தொட்டி கழுவும்போது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.

 




உயிரிழந்த சூர்யா

கோவை ஆர்.எஸ்.புரம் ஃபாதர் ரேண்டி சாலையில் ஏராளமான தங்கப்பட்டறைகள் உள்ளன. அதில், ரவிசங்கர் என்பவருக்குச் சொந்தமான தங்கப்பட்டறையில் உள்ள கழிவுநீர்தொட்டியை, இன்று அதிகாலை சுத்தம்செய்யும் பணியில் இவர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென்று விஷவாயு தாக்கியதில், கௌரிசங்கர் (23), ஏழுமலை (23), சூர்யகுமார் (23) ஆகிய மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தனர்.



ஏழுமலை & சூர்யகுமார்

இவர்களில், கௌரிசங்கர் மற்றும் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் சூர்யகுமார் உயிரிழந்தார். இந்த மூவரின் இறப்பு, அவர்களது உறவினர்களிடையே கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை, ஃபாதர் ரேண்டி சாலையில் உள்ள கழிவுநீர்தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை என்று சுத்தம் செய்யப்படுவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");