[ad_1]

'' 'ஊழலை ஒழிக்கப் போகிறேன்' என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தவர் மோடி. ஆனால், அவரது கட்சியில் உள்ளவர்களின் ஊழலைக்கூட ஒழிக்க முடியாத தலைவராக இருக்கிறார்'' என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

                          


அரியலூர், பெரம்பலூர் 7ஆவது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் தொடங்கியது. இரண்டு நாள்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை அருகே தொடங்கிய பேரணி, புதிய பேருந்து நிலையம் வரைசென்று நிறைவடைந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலக்குழு உறுப்பினர் செல்லத்துரை பேசுகையில், "ஓ.பி.எஸ், எடப்பாடி இருவரும் தமிழகத்தைக் கூறுபோட்டு மோடியின் கையில் கொடுத்துவிட்டார்கள். தமிழக அமைச்சர்கள் மோடியைப் புகழ்ந்து பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது இதை செய்தார்களா? இப்போது பேசுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இது உங்களுக்கே புரியும்; நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.

                             

                             

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதற்கு விஷால் மனுவே சாட்சி. முதலில் விஷால் மனுவை ஏற்றுக்கொள்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் நிராகரித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். என்ன நடக்கிறது? தேர்தல் ஆணையம் பொதுவானதா இல்லை மத்திய - மாநில அரசுகளின் கைப்பாவையா? மோடிமஸ்தான் வேலையை தமிழ்நாட்டில் செய்துகொண்டிருக்கிறார் மோடி. அதற்கு தமிழக அமைச்சர்களும் துணைபோகிறார்கள். இது வேதனையாக உள்ளது. மாநிலத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அதனை முதலில் நிறைவேற்றவேண்டும். அதை விட்டுவிட்டு பதவி போய்விடக்கூடாது என்பதற்காக பி.ஜே.பி-யைப் பிடித்துக் கொண்டிருக்கக்கூடாது. 

 

                       

'பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் வரப்போகிறது. அப்படி வந்தால், இந்தப் பகுதியே சிங்கப்பூருக்கு இணையாக மாறப்போகிறது. இடம் கொடுப்பவர்களுக்கு வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். நீங்கள் எல்லோரும் செல்வந்தர்களாக மாறப்போகிறீர்கள். இங்குள்ள மக்கள் எல்லோரும் தரை வழியில் பயணிக்கமாட்டீர்கள். ஆகாய வழியில்தான் பயணிக்கப்போகிறீர்கள்' என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி இம்மாவட்டத்தில் 350 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்களைக் கைப்பற்றினார்கள். ஆனால், இன்றளவும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லை. இடம் இருந்தும் விவசாயம் செய்யமுடியாமல், மக்கள் கூலிவேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தினை உடனே செயல்படுத்தவேண்டும். இல்லையேல், விவசாயிகளிடம் நிலத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும். அதேபோல்,  அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் இரு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருகின்றன. அவை மக்களிடம் வழங்கப்படவேண்டும்” என்று முடித்தார்.

                          

அடுத்ததாகப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ லாசர், "ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்தவர் மோடி. ஆனால், அவரது கட்சியில் உள்ளவர்களின் ஊழலைக்கூட ஒழிக்க முடியாத தலைவராக இருக்கிறார். அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா கோடிக்கணக்கான ரூபாய்களில் பல தொழில்களைத் தொடங்கியிருக்கிறார். பி.ஜே.பி தலைவராகப் பதவி ஏற்ற  மூன்று ஆண்டுகளில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 85 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. எந்தத் தொழிலும் செய்யாதவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது? இதுபோன்று பி.ஜே.பி அமைச்சர்கள் மற்றும் அந்தக் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் முதலமைச்சர்கள்மீது ஊழல்கள் மற்றும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே, பி.ஜே.பி ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிக்கு எதிரான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது.

                       

                                                        

                        


பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்தைக்கொண்டு, பெரும் கோடீஸ்வரர்களின் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலானக் கடன்களை ரத்து செய்துள்ளார்கள். ஆக மோடி, கார்ப்ரேட்களுக்குத்தான் பிரதமரே தவிர மக்களுக்கு அல்ல. கேரளா, திரிபுராவில் கம்யூனிஸ்ட்களின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலங்களில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று நாங்கள் சொல்லவில்லை. இப்போது உள்ள குடியரசுத் தலைவர் சொல்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளின் அருமை பெருமைகளை தெரிந்துகொள்ளவேண்டும். மக்களுக்காக களத்தில் முதல் ஆளாகப் போராடும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளே" என்றார் ஆணித்தரமாக.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");