[ad_1]





நரேந்திர மோடி அரசு, விளம்பரத்துக்காக செலவழித்த 3,755 கோடி ரூபாயை பா.ஜ.க-விடமிருந்து வசூல்செய்யலாமா? என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 




மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க, கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவழித்துள்ளது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், 'டெல்லி அரசு விளம்பரத்துக்காகச் செலவழித்த 97 கோடி ரூபாயை, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து வாங்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். தற்போது, அதே வழிமுறைகளைப் பின்பற்றி, மத்திய அரசு செலவழித்த 3,755 கோடி ரூபாயை பா.ஜ.க-விடமிருந்து வசூல் செய்யலாமா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");