[ad_1]
தமிழக நீர்ப்பாசன திட்டங்கள் நவீனமயமாக்கலுக்காக உலக வங்கி ரூ.2,037.85 கோடி (318 மில்லியன் டாலர்) கடன் வழங்க உள்ளது. இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் மத்திய அரசு, தமிழக அரசு, உலக வங்கி ஆகியவை இடையே நேற்று டெல்லியில் கையெழுத்தானது.
தமிழக விவசாயத்தை நவீனப்படுத்த உலக வங்கியிடம் ரூ.2,037.85 கோடி கடனுதவி பெற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான ஒப்பந்தமும் உலக வங்கியிடம் கையெழுத்தாகிவிட்டது. இதன்மூலம் தமிழக விவசாயிகள் சுமார் 5 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். நீர் மேலாண்மை, வேளான் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிறு விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தும் திட்டமும் உலக வங்கி கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 4,800 நீர்ப்பாசனக் குளங்கள், 477 தடுப்பு அணைகள் உள்ளிட்டவை புதுப்பித்து நவீனப்படுத்தப்படும். மேலும் 1,60,000 ஹெக்டேர் நிலங்கள் முழு அளவு பாசன நிலங்களாக மாறும் என்று மத்திய நிதியமைச்சக இணைச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
318 மில்லியன் டாலர் ஒப்பந்தம்! - விவசாயத்தை நவீனப்படுத்த உலக வங்கியுடன் கைக்கோக்கும் தமிழக அரசு
TAGS :
COMMENTS