[ad_1]







நாளை தனது அரசியல் பிரவேசம் தொடர்பான முடிவை அறிவிக்க இருக்கிறார் நடிகர் ரஜினி. ‘நான் மீண்டும் உயிர் பெற்று வந்ததற்கு ரசிகர்கள்தான் காரணம். தினமும் தியானம் செய்யுங்கள்... குடும்பம்தான் முக்கியம்’ என்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நான்கு நாள்களாக ரசிகர் பட்டாளத்துடன் உரையாடி வருகிறார். 1996-ல் தனது அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடுவதாகச் சொல்லிவந்த ரஜினி. இத்தனை ஆண்டுக்காலத்தில் அது தொடர்பான எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காமலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது அரசியல் அறிவிப்பை இந்த ஆண்டின் இறுதி நாளில் அறிவிப்பதாகக் கூறியிருப்பதை அடுத்து என்னவாக இருக்கும் என்று மக்களில் ஒரு பகுதியினர் ஆர்வத்தில் உள்ளார்கள். வேறு சிலரோ, இந்த முறையும் அவர் ஏமாற்றவே செய்வார் என்று கூறிவருகிறார்கள். இந்த நிலையில் அவரது இந்த அறிவிப்பு தொடர்பாக மக்களிடையே கருத்து கேட்கப்பட்டது அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் பின்வருமாறு.


தீடீரென்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தற்போதைய தமிழக அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டுதான் என்று 58.6% பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். மீதம் 41.4% பேர் கமல் போன்ற சக நடிகர்கள் எடுத்துள்ள அரசியல் நிலைபாட்டினால் என்று கூறியுள்ளார்கள்.



ரஜினி அரசியலில் நுழைய தற்போதைய சூழல் உகந்ததாக இருக்கிறது என்று 51.2% பேரும், இல்லை என்று 48.8% பேரும் கருத்து கூறியுள்ளார்கள். 



அப்படி ரஜினி அரசியலுக்கு வந்தால் தற்போதைய அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படுமா என்கிற கேள்விக்கு அவர் வருவதால் பெரிதாக எதுவும் மாற்றம் நிகழ்ந்துவிடாது என்றே பெரும்பாலானவர்கள் கூறியுள்ளார்கள். 



ரஜினி தனிக்கட்சி தொடங்குவதே சிறந்தது என்று 70%-க்கும் மேற்பட்டவர்கள் கருத்து கூறியுள்ளார்கள். 



முக்கியமாக ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பை பற்றி தனிப்பட்ட கருத்துகளைக் கூறியுள்ள மக்கள், ‘வரவேற்கத்தக்க முடிவு என்றும்...’ ‘தலைவா! இதுவே கடைசி முறை இனிமேலும் தாமதிக்காதே’ என்பது மாதிரியான கருத்துகளைக் கூறியுள்ளார்கள்.ரஜினிக்கு நாளையேனும் காலம் கனியுமா? 

  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");