[ad_1]
தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான கபடிப் போட்டியை தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் நடத்திட அரசு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், கபடி விளையாட்டுப் போட்டியை திருச்சி மாவட்டத்தில் நடத்திட தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கபடிப் போட்டி நடத்திட வேண்டுமானால், உயர் நீதிமன்றத்தில் ஆணை பெற்று நடத்திட வேண்டும் என மாவட்ட காவல்துறை தடைவிதிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையில் தமிழகம் முழுக்க பட்டிதொட்டிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கு மத்தியில், கபடி போட்டியை நடத்துவது வழக்கம். இப்படியான சூழலில், அரசின் நெருக்கடிகள் தங்களைப் பாதிப்பதாகக் கூறி, பாரம்பர்யம் காத்திடவும் கபடிப் போட்டிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்திடவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கபடி வீரர்கள் 30 அடி நீளமுள்ள மனு எழுதி, கபடி வீரர்கள் கையெழுத்திட்டு ஊர்வலமாக வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் கொடுத்தனர். 30 அடி நீளமுள்ள மனுவை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் செல்ல காவல்துறை அனுமதி மறுக்கவே, அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கபடிப் போட்டிகள் நடத்தத் தடை..! ஆட்சியருக்கு 30 அடி நீள புகார் மனு
TAGS :
COMMENTS