[ad_1]
ஒகி புயலில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி, சென்னையில் போஸ்டர் ஒட்டிய புரட்சிகர மாணவர் முன்னணியைச் சேர்ந்த 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
புயலில் சிக்கி இன்னும் கரை திரும்பாத குமரி மாவட்ட மீனவர்களை மீட்டுத்தரவும், அவர்களின் நிலைமையை அறிந்து கூறவும் வலியுறுத்தி, மூன்று நாள்களாக அங்கு மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். குழித்துறையில் ரயில்நிலையம் முற்றுகை, குளச்சலில் சாலைமறியல் என அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, மற்ற மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சென்னையில் நேற்று, 25 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், தலைமைச்செயலக முற்றுகைப் போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீஸாரின் தடுப்பால் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சென்னையில் பரவலாக மீனவர்களை மீட்கக் கோரியும், மீட்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. வெள்ளிக்கிழமை அதிகாலை, புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பினர், அகில இந்திய வானொலி அருகிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது, சென்ற வருடம் தை மாதம் தாக்குதலுக்கு உள்ளான திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த திலீபன், தமிழ் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.
காலை 6.30 மணிக்கு கைதுசெய்யப்பட்ட அவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 153, 353, 341, 294 பி, 506/1 & தமிழ்நாடு திறந்தவெளிகள் அழகைக் குலைத்தலைத் தடுக்கும் சட்டத்தின் பிரிவு 4 ஏ 1 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மாலை 5 மணிக்கு, எழும்பூர் நடுவர்மன்றத்தில் போலீஸார் நிறுத்தினர். பின்னர் நடுவரின் வீட்டுக்கு இருவரும் அழைத்துச்செல்லப்பட்டனர். இரவு 10 மணியளவில், நடுவரின் உத்தரவை அடுத்து திலீபன், தமிழ் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
குமரி மீனவர்களை ஆதரித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் சென்னையில் கைது
TAGS :
COMMENTS