[ad_1]
2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். குற்றங்களை நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, 'இந்த வழக்கில் உண்மைத் தன்மையை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் மத்திய அரசு நிரூபிக்கவேண்டும். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவரது கூட்டாளிகள் கொண்டாடினார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு சரியான தீர்ப்பை அளித்தது. அதேபோல இந்த வழக்கிலும் நடைபெறும்' என்று பதிவிட்டுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
2ஜி வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்..! சுப்பிரமணியன் சுவாமி
TAGS :
COMMENTS