[ad_1]







2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திரண்டிருந்த அக்கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அறிவாலயத்தில் நேரலையாக வழக்குத் தீர்ப்பு விவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தி.மு.கவினர் தயாராக வைத்திருந்த பட்டாசுச் சரத்தைப் பற்றவைத்து பெரும் கொண்டாட்டத்துடன் வெடித்து மகிழ்ந்தனர்.




தகவல் அறிந்த சென்னை தி.மு.கவினர் வரிசையாக அறிவாலயத்தில் குவியத் தொடங்கினர். வீட்டில் இருந்தபடியே தீர்ப்பு விவரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முற்பகல் 11.25 மணிக்கு அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த தி.மு.கவினர் வழக்கத்துக்கு மாறாக, அவரை வரவேற்றும் பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தி.மு.கவின் தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டி அவர்கள் முழக்கமிட்டனர்.




முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, தி.மு.கவின் துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஸ்டாலினை உற்சாகத்தோடு வரவேற்றனர். அங்குள்ளவர்களுக்கு ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்.  பட்டாசு சத்தத்தால் அண்ணா அறிவாலயம் அதிர்ந்து போனது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");