[ad_1]





கேரளாவில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பயன்பெறும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது கேரள அரசு.


 


கேரளாவில்,  சமீபத்தில் தாக்கிய ஒகி புயலால் திருவனந்தபுரம் மாவட்டம் நிலைகுலைந்தது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலர், கரை திரும்பவில்லை. தமிழகத்தின் கன்னியாகுமரியிலும் இதேநிலைதான். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது, மீனவர்களின் குடும்பங்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், கேரள மீன்வளத்துறை மற்றும் கேரள மீனவர்கள் நலவாரியம் இணைந்து 'Group Accident Insurance' என்னும் காப்பீட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இத்திட்டத்தின் கீழ், 18-70 வயதில் இருக்கும் மீனவர்கள் பயன்பெறுவர். மீன்பிடிக்கும்போது காணாமல்போகும் மீனவர்கள் மற்றும் படுகாயம் அடையும் மீனவர்களுக்குக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். விபத்து, இயற்கைப் பேரிடர்களில் உயிரிழக்கும் மீனவர்களுக்கு, ரூ.10 லட்சம்வரை காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளனர்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");