[ad_1]





உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 





சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கௌசல்யா தம்பதியை ஒரு கும்பல் உடுமலைப்பேட்டையில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ல் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த சங்கர் உயிரிழந்த நிலையில், கௌசல்யா தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நலம் பெற்றார். இதுதொடர்பான வழக்கு கடந்த ஒன்றரை வருடங்களாக திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அலமேலு நடராஜன், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றும் மேலும் ஒருவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு அளிக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்திலிருந்து குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்படும்போது, சங்கர் கொலையை 2 பேர் நியாயப்படுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு கூடியிருந்த மக்கள் அவர்கள் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பொதுமக்களிடமிருந்து அந்த நபர்களை மீட்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");