[ad_1]

உலக நிகழ்வு

ஆப்பிள் நிறுவனத்தின் போன் விற்பனை எதிர்பார்க்கும் அளவைவிட மந்தமாக இருக்கலாம் என்ற செய்தியால் அமெரிக்க சந்தையில் டெக்னாலஜி பங்குகள் இறக்கத்தைச் சந்தித்தன. பெரும்பாலான ஐரோப்பிய சந்தைகள் விடுமுறையில் உள்ளன. பிட்காயின் பெரிய அளவிலான ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. ஜப்பான் சந்தை பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஆரம்பித்துள்ளது.




நாட்டு நடப்பு

2018-ல் இந்தியா உலகளாவிய அளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை அடையும் என்கின்றது சி.இ.பி.ஆர் அறிக்கை. தொழில்முனைவோர்கள் பாசிட்டிவ்வான ஒரு மனநிலையில் இருக்கின்ற போதிலும் செயல்பாடுகள் குறித்த நம்பிக்கை கடந்த நான்கு வருடத்தில் இருந்ததைக்காட்டிலும் குறைவாக உள்ளது என்கின்றது கிராண்ட் தார்ட்டான் அறிக்கை. ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஐந்து மாதங்களில் நவம்பரில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி-யின் அளவே ஆகக்குறைவாக (ரூபாய் 88,808 கோடி) இருந்துள்ளது.

பங்குச்சந்தை

கடைசி அரைமணி நேரத்தில் வந்த திடீர் ஏற்றத்தினால் நிப்டி நேற்று 10544 என்ற புதிய உச்சத்தை சந்தித்தது. சென்செக்ஸ் 34,010 என்ற அளவில் முடிவடைந்தது. 26-12- 2017 அன்று கேஷ் மார்க்கெட்டில் அந்நிய முதலீட்டாளர்கள் 2,209.12 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கியும் 2,073.19 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்றனர். நிகர முதலீடு 44.07 கோடி ரூபாய் அளவு குறைந்தது.

கமாடிட்டி சந்தை

ப்ரெண்ட் குரூடாயில் பீப்பாய் ஒன்று 65.42 டாலர் அளவில் இருக்கின்றது. தங்கம் 1,282.82 டாலர் என்ற விலையில் இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கெதிரான ரூபாயின் மதிப்பு 64.08 ஆக செவ்வாய் அன்று இருந்தது.

நிறுவனச் செய்திகள்



ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனம் தன்னுடைய கடன் சுமையை 45,000 கோடியிலிருந்து 6,000 கோடி அளவிற்கு குறைக்கும் முயற்சியாக தன்னிடம் இருக்கும் ஸ்பெக்ட்ரம், செல்போன் டவர்கள், ஆப்டிகல் பைபர் கேபிள் தடங்கள் மற்றும் அசையாத சொத்துக்களை விற்பனை செய்ய முடிவுசெய்துள்ளதென செய்தி வந்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனம் 5.1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை உலக கடன் சந்தையில் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் திரட்ட உத்தேசித்துள்ளது.

பல்க் டீல்கள்



எதைக்காட்டுகின்றது எப் அண்ட் ஓ சந்தை

95% சந்தை வாரியான உச்ச பட்ச பொசிஷன் அளவீட்டை எட்டியதால் பின்குறிப்பிட்டுள்ள பங்குகளில் இன்றைக்கு புதிய வியாபாரத்திற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது: BALRAMCHIN, DHFL, DLF, GMRINFRA, HDIL, IFCI, JETAIRWAYS, JISLJALEQS, JPASSOCIAT, RELCAPITAL, WOCKPHARMA

டிசம்பர் மாத காண்ட்ராக்ட்களில் நிப்டி 10000 புட் ஆப்ஷனில் அதிக பட்சமாக 70,90,200 என்ற ஓப்பன் இன்ட்ரெஸ்ட்டும் நிப்டி 10400 புட் ஆப்ஷனில் 59,26,325 என்ற ஒப்பன் இண்ட்ரெஸ்ட்டும் இருந்தது. கால் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை நிப்டி 10500ல் 55,45,275 என்ற அளவிலான ஓப்பன் இன்ட்ரெஸ்ட் இருந்தது.

இதர செய்திகள்


பர்க்லேய்ஸ் தன்னுடைய அறிக்கையில் அரசாங்கம் நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை மூலம் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட அளவினை விட அதிகமான நிதிதனை திரட்டக்கூடும் என்று கூறியுள்ளது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");