[ad_1]





 




காரைக்குடியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒன்றுகூடிய முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் கோட்டையூர் அழகப்பா மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள்  சங்கமித்த நிகழ்ச்சி காரைக்குடி 'தாபா'வில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைச் சுந்தரராஜன், சரவணன், தங்கதுரை ஆகியோர் பல ஆண்டுகளாகச் சிதறிக்கிடந்த பள்ளி நண்பர்களை ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் ஆகியவற்றின் மூலமாகத் தேடி ஒன்றிணைத்திருக்கிறார்கள்.

அவர்கள் மேலும் பேசும்போது, "இவ்வாறு இணைந்த நண்பர்கள் சுமார் 100 பேர். இதில், பல பேர் டாக்டர்கள், இன்ஜினீயர்கள், சப்இன்ஸ்பெக்டர் , தொழிலதிபர்கள் என வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு 40 குடும்பத்தினர்கள் வந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஓரே இடத்தில் கூடிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக பாரம்பர்ய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், சோபி, இடியாப்பக்கட்டை உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கியிருக்கிறார்கள்.

இதில், `எங்களோட குறிக்கோள் 2021-ம் ஆண்டுக்குள் சமூக சேவைகள் செய்யும் அமைப்பாக மாற்றுவது என முடிவெடுத்திருக்கிறோம்' என்றவர்கள் மேலும், 'மாலையில் நடந்த பகிர்வில் பல மலரும் நினைவுகள் அதாவது, பள்ளியில் செய்த சேட்டைகள், வாத்தியாரிடம் திட்டுவாங்கியது என மலரும் நினைவுகளை நினைவுபடுத்தி பேசினோம். கடைசியாக நாங்கள் எல்லோரும் பிரியமுடியாமல் கனத்த இதயங்களோடு விடைபெற்றோம்' என்றார்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");