[ad_1]
Chennai: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த கடைசி டி20 போட்டியிலும் இந்தியா வெற்றிபெற்று தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. இதையடுத்து, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பௌவுலிங்கை தேர்வு செய்தார். களமிறங்கிய இலங்கை அணி சிரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அசெலா குணரத்னே அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய உனட்கட் 4 ஓவர்கள் போட்டு 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
136 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் கேப்டன் தோகித் சர்மா ஒரு சிக்ஸருடன் 27 ரன்களில் ஆட்மிழந்தார். இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்து தன் பங்கிற்கு வலுசேர்த்தார். மனிஷ் பாண்டே 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல இந்திய அணி வெற்றியை எளிதாக எட்டியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை உனட்கட்டும், தொடர் நாயகன் விருதை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் பெற்றனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் வெற்றி: தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
TAGS :
COMMENTS