[ad_1]
இந்தியா- இலங்கை இடையிலான டி-20 தொடரை இந்திய அணி வென்றது.
இந்தியா இலங்கை இடையிலான இரண்டாவது டி-20போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர். இருவரும் இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ரோஹித் சர்மா 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த தரங்கா மற்றும் குஷால் அதிரடியாக ஆடினர். இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். தரங்கா 47 ரன்களிலும் குஷால் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதனையடுத்து இலங்கை அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ரோஹித், ராகுல் அதிரடி..! - டி20 தொடரை வென்றது இந்திய அணி
TAGS :
COMMENTS