[ad_1]





குமரி மாவட்டத்தில் ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மீனவ மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.




கடந்த 30-ம் தேதி குமரி மாவட்டத்தை உலுக்கிய ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். வெள்ளிமலைப் பகுதியில் உள்ள கல்ப்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதை பார்வையிட்டார். விவசாயிகள் அளித்த மனுவைப் பெற்றுக்கொண்டார். பின்னர், தூத்தூரில் உள்ள செயின்ட் ஜூட் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது கடலில் காணாமல் போன மீனவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மீனவர்கள் காணாமல் போனது தொடர்பாக பிரதமரிடம் பேசி தேடுவதற்கு ஏற்பாடு செய்தேன். அமைச்சர்களை அனுப்பி உதவவைத்தேன். இப்போதும் நிறைய பேரைக் காணவில்லை என்பதால் தேடும் பணி தொடரும். கடைசி மீனவன் கிடைக்கும் வரை தேடும் பணியைத் தொடர்ந்து நடத்துவோம். புயலால் வீடிழந்தவர்களுக்குப் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கபடும். அத்துடன், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும். கடலில் காணாமல் போனவர்கள் இறந்ததாக அறிவிக்க 7 வருடங்கள் என்று இருப்பதை, முடிந்த அளவுக்குச் சட்டத் திருத்தம் செய்யப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்பவர்களுக்கு அவசரகாலத்தில் தகவல் தெரிவிக்க ஏதுவாக 68 கோடி ரூபாய் செலவில் 300 அடி உயர கோபுரம் அமைத்து தகவல் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்பு காரணமாக மீனவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");