[ad_1]

";குஜராத் தேர்தல் வெற்றி, பா.ஜ.க-வுக்குக் கிடைத்த தார்மீகத் தோல்வி” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட் செய்துள்ளார்.



குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, இம்மாதம் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 68.41 சதவிகித ஓட்டுகள் பதிவான நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தமுள்ள 182 இடங்களில் 99 இடங்களை பா.ஜ.க வென்று, 6-வது முறையாக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், பாரதிய பழங்குடியினர் கட்சி 2 மற்றும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. கடந்த 2012 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பா.ஜ.க. 115 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், தற்போதைய தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வின் வீழ்ச்சியையே காண்பித்துள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தச் சூழலில் நடுநிலையான தீர்ப்பளித்த குஜராத் வாக்காளர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது தற்காலிகமான, மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ள உதவிய ஒரு வெற்றி மட்டுமே. ஆனால், தார்மீகரீதியாக இது பா.ஜ.க-வின் தோல்வியையே காட்டுகிறது. சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட அநீதி, மனக்கவலை மற்றும் அநீதிக்கு எதிராகவே குஜராத் வாக்களித்துள்ளது. மொத்தத்தில் குஜராத், 2019-க்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.




I congratulate Gujarat voters for their very balanced verdict at this hour.
It is a temporary and face-saving win, but it shows a moral defeat for BJP.
Gujarat voted against atrocities, anxiety and injustice caused to the common people. Gujarat belled the cat for 2019
— Mamata Banerjee (@MamataOfficial) December 18, 2017