[ad_1]





மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். 




மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில், இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இஸ்லாமிய பெண்கள் ஹஜ் யாத்திரைக்குச் செல்ல வேண்டுமானால், ஆண் ஒருவர் துணையுடன் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தது. பெண்களுக்குப் பாகுபாடு காட்டும் வகையிலான இந்த விதியை நாம் தளர்த்தி விட்டோம். இதனால், நடப்பாண்டில் ஹஜ் புனித யாத்திரைக்காக ஆண்கள் துணையின்றி செல்வதற்காக சுமார் 1,300 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ல், அவரது நிறைவேறாத கனவான ‘தூய்மையான இந்தியாவை’ உருவாக்க வேண்டும் என்று நாம் உறுதிபூண்டோம். அதற்காக நாடு முழுவதும் பரவலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் பங்களிப்பால் நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மிகப்பெரிய மாற்றத்தை நம்மால் பார்க்க முடிகிறது. 2018-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி ரொம்பவே ஸ்பெஷலானது. குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பைச் சேர்ந்த பத்து நாடுகளின் தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை. இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் அது.


ஜனநாயகத்தில் வாக்குரிமையே மிகப்பெரிய பலம். அது நம் நாட்டையே மாற்றும் வல்லமை பெற்றது. புதிய இந்தியாவின் இளைஞர்கள் நமது நாட்டை மாற்றுவார்கள். மாவட்டந்தோறும் மாதிரி நாடாளுமன்றங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சிப் பணிகளை பெரிய அளவில் எடுத்துச் செல்வது குறித்தும், நாட்டை மாற்றுவது குறித்தும் அங்கு விவாதிக்கப்படும். புதிய இந்தியாவின் இளைஞர்கள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");