[ad_1]

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு இடையேயும், ஒரே மாநிலத்திற்குள்ளும் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான மின்னணு அடிப்படையிலான பில் வசதி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலின் 24-வது கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.  ஜனவரி 16-ம் தேதிக்குள் ஈ-பில் உருவாக்குவதற்கான நடைமுறை தயாராகி விடும் என்றும், அனைத்து மாநிலங்களும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன் அதனை அமல்படுத்த முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மின்னணு முறையிலான ஈ -பில் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும், இதற்கான மத்திய அரசின் அறிவிக்கை வரும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் சரக்குகளைக் கொண்டுசெல்வதில் எந்தவித இடையூறும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");