[ad_1]



“நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது” எனத் தெலங்கானா மாநில பி.ஜே.பி. மூத்த தலைவர் கிருஷ்ணசாகர் ராவ் தெரிவித்துள்ளார். 


ஹைதராபாத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இப்படித் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மேலும் அவர், “நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகைசெய்யும் மசோதா, தற்போதைய கூட்டத்தொடரிலோ அல்லது அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலோ தாக்கல் செய்யப்படலாம் என்ற அடிப்படையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவிக்கிறேன். மேலும், குஜராத் தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பிரதமர் மோடி முக்கிய விவகாரமாக எடுத்துச் செயல்படுவார்” என்று கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ‘டைம்ஸ்’ குழுமம் இணையதளத்தில் நடத்திய சர்வேயில், பிரதமர் மோடிக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்களிடம் பிரபலமான தலைவர் என்ற பார்வை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பிரச்னைகள், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், மீண்டும் குஜராத்தில் பி.ஜே.பி. ஆட்சியமைக்கும் என்றும் அந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. 

மேலும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதமர் மோடியே புகழ்பெற்ற தலைவராகத் திகழ்வார் என்றும், மக்கள் அவருக்குப் பெரும்பான்மையாக வாக்களிப்பார்கள் என்றும் தெரியவந்துள்ளதாக அந்தத் தகவல் கூறுகிறது.

இப்போதைக்கு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்களிப்போம் என்று 79 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். 9 மொழிகளிலான இணையதளம் மூலம் 'டைம்ஸ்' குழுமம் இந்த சர்வேயை நடத்தியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. டிசம்பர் 12 முதல் 15-ம் தேதி வரை சர்வே நடத்தப்பட்டுள்ளது. இதில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 20 சதவிகிதம் பேரே, காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது. 

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது தலைமையை 58 சதவிகிதத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 18-ம் தேதி வெளியாகவிருக்கும் குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, நாடாளுமன்றத் தேர்தலை 2018-ல் நடத்துவது பற்றி மத்திய பி.ஜே.பி அரசு முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நரேந்திர மோடி தலைமை மட்டும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் போதுமானதாக இருக்காது என்று ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ். கூறிவந்த நிலையில், இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே, நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு செயல்பட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயலாற்றத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், மக்களின் மனநிலை எப்படி இருக்கும், அடுத்த ஓராண்டில் என்னென்ன மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் நிகழப் போகின்றன என்பதைப் பொறுத்து மக்கள் முடிவெடுப்பார்கள் என்றே தெரிகிறது. 


கருத்துக் கணிப்புகள் எதுவாக இருந்தாலும், அவற்றையெல்லாம் பொய்யாக்கிய மாறுபட்ட முடிவுகள் வெளியான தேர்தல்களும் நடந்தது உண்டு. எனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருப்போம் மக்களாக நாம் ...
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");