[ad_1]
Chennai: 2017, பல இந்திய பிரபலங்களுக்கு மிக முக்கிய வருடம். விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளில் வெற்றி வாகை சூடிய சிலர், தன் வாழ்க்கைத் துணையோடு இணைந்த வருடம் (Rewind2017). அந்த வரிசையில் ப்ரியாமணி, சமந்தா, காளிவெங்கட், நமீதா, ஜாஹிர் கான், விராட் கோலி, `ஹிப்ஹாப் தமிழா' ஆதி ஆகியோர் தங்கள் இணையுடன் கரம்கோத்தனர். ஆடம்பரம், எளிமை இரண்டும் நிறைந்த திருமணங்களின் தொகுப்பு இதோ...
ப்ரியாமணி - முஸ்தஃபா ராஜ்:
`முத்தழகி'யாக வந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட ப்ரியாமணி, முஸ்தஃபா ராஜ் என்பவரை காதலித்து, ஆகஸ்ட் 23-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். IPL நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான முஸ்தஃபா ராஜ், ஒரு தொழிலதிபர். மிகவும் எளிமையான முறையில் பெங்களூரில் உள்ள பதிவு அலுவலகத்தில் திருமணம் நடந்தது. சங்கீத், மெஹெந்தி போன்ற நிகழ்வுகளை நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியது ப்ரியாமணி - முஸ்தஃபா ஜோடி. திரையுலக நண்பர்களுக்காக வரவேற்பு விழா விமரிசையாக நடைபெற்றது. அதிலும் தெலுங்குத் திரைப்பட பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
சமந்தா - நாக சைதன்யா :
இந்து, கிறிஸ்டியன் என இரு மத முறைப்படி, பீச் சிட்டி கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது சமந்தா - நாக சைதன்யா திருமணம். அக்டோபர் 6-ம் நாள் இந்து முறைப்படி தாலி அணிவித்தும், அக்டோபர் 7-ம் நாள் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றியும் திருமணம் செய்துகொண்டனர். முகூர்த்த நாளன்று, நாக சைதன்யாவின் பாட்டி அணிந்த புடைவையைத்தான் சென்டிமென்டாக அணிந்திருந்தார் சமத்து சமந்தா. கடற்கரை ஓரத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்துக்கு தென்னிந்தியத் திரையுலகமே திரண்டது. திருமணம் முடிந்ததும் ஹனிமூன் கொண்டாடுவதற்கு லண்டனுக்கு சிட்டாகப் பறந்தனர் சமந்தா-சைதன்யா ஜோடி.
காளி வெங்கட் - ஜனனி :
`முண்டாசுப்பட்டி', `மாரி', `இறுதிச்சுற்று', `தெகிடி', `கொடி', `மெர்சல்' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காளி வெங்கட், ஜனனி என்பவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருப்போரூர் கோயிலில் அக்டோபர் 30-ம் தேதி கரம் பிடித்தார். மிகவும் சிம்பிளான முறையில் திருமணத்தை முடித்துக்கொண்டு, `காத்தாடி', `96', `நாகேஷ் திரையரங்கம்' என, படங்களில் தற்போது பிஸியோ பிஸி!
நமீதா - வீரேந்திரா:
`மச்சான்ஸ்' என, தமிழ் இளைஞர்களை செல்லமாக அழைக்கும் நமீதா, வீரேந்திரா என்பவரைக் காதலித்து, நவம்பர் 24 -ம் தேதி திருமணம் செய்துகொண்டார். `பிக் பாஸ்' ரைசா மூலம் வெளிவந்த நமீதா திருமண சீக்ரெட், நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக திருப்பதி இஸ்கான் கோயிலில் நடந்தது. திருமணம், வரவேற்பு விழா என அனைத்தும் தென்னிந்திய முறைப்படி நிகழ்ந்தன. வடஇந்தியர்கள் கொண்டாடும் சங்கீத், மெஹெந்தி நிகழ்ச்சிகள் 23-ம் நாள் நடைபெற்றன. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண நிகழ்வில் சரத்குமார் - ராதிகா ஜோடிதான் ஸ்பெஷல் கெஸ்ட்.
ஜாஹீர் கான் - சகாரிகா காட்கே :
கிரிக்கெட் வீரர் ஜாஹீர் கானும் பிரபல பாலிவுட் நடிகை சகாரிகா காட்கேவும் நவம்பர் 23-ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். மெஹெந்தி, சங்கீத், வரவேற்பு விழா என அத்தனை நிகழ்வுகளிலும் ஜாஹீர் சகாரிகா ஜோடி பார்ப்பதற்கு அழகோ அழகு! திரையுலகப் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவர்களின் வரவேற்பு விழாவில் பங்கேற்றனர். விருஷ்கா ஜோடியும் வரவேற்பு விழாவில் ஒன்றாக இணைந்து மணமக்களை வாழ்த்தினர்.
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா:
ஜாஹீர் கான் - சகாரிகா காட்கே ஜோடியைபோலவே, விராட் - அனுஷ்கா ஜோடியும் கிரிக்கெட் - சினிமாவின் இணைப்பு. பல சர்ச்சைகளைக் கடந்து, ஒருவழியாக டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் இனிதே நடந்தது விருஷ்கா ஜோடியின் திருமணம். இந்து மத முறைப்படி நிகழ்ந்த இந்தத் திருமணத்தில் விருஷ்காவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சங்கீத், மெஹெந்தி, ஹல்தி உள்ளிட்ட வடஇந்திய நிகழ்வுகளும் பிரமாண்டமாக நடைபெற்றன. சினிமாப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலர் தங்களின் வாழ்த்துகளை இணையதளத்தில் பதிவுசெய்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி, டெல்லியில் வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட சில அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். கிரிக்கெட் மற்றும் பாலிவுட் நண்பர்களுக்காக, டிசம்பர் 26-ம் தேதி மும்பையில் மேலும் ஒரு பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இவர்களோடு `சியான்' விக்ரமின் மகள் அக்ஷிதா, கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஆகியோரின் திருமணங்களும் நடந்தன. ஹிப்ஹாப் ஆதியின் நிச்சயதார்த்தமும் இந்த ஆண்டு இனிதே நடைபெற்றது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சம்மு முதல் விருஷ்கா வரை... 2017 செலிபிரிட்டி திருமணங்கள்! #Rewind2017 #Virushka | Samantha to Anushka Sharma
TAGS :
COMMENTS