[ad_1]
Chennai:
நூறாண்டுகளை இன்னும் சில வருடங்களில் நிறைவு செய்யவிருக்கும் விகடன் குழுமத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சினிமா விருதுகளும், சிறந்த நம்பிக்கை மனிதர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. எல்லாத் துறைகளிலும் சரியான நபர்களை அடையாளம் கண்டு விருதுகளை வழங்குவதில் விகடன் குழுமம் பெருமிதம் கொள்கிறது.
அந்த வரிசையில் தற்போது முதன் முறையாக தொழில் துறையினரையும், தொழில்முனைவோர்களையும் கெளரவிக்கும் நாணயம் விகடன் பிசினஸ் சூப்பர் ஸ்டார் அவார்ட்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று 22/12/2017 வெள்ளிக்கிழமையன்று மாலை நடக்க இருக்கிறது.
சென்னை ஹயாத் ரீஜென்சியில் இன்று 22/12/2017 வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நூறாண்டுகளைக் கடந்த நிறுவனம் முதல் சமீபத்தில் தொடங்கி வளர்ச்சியடைந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வரை பல வகைமைகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
ஸ்டார்ட்அப் சேம்பியன் அவார்ட், ரைசிங் ஸ்டார் அவார்ட், கோல்டன் ஃபீனிக்ஸ் அவார்ட், இன்னோவேஷன் அவார்ட்,
பிசினஸ் மென்ட்டார் அவார்ட் (இன்ஸ்ட்டிடியூஷன்), பிசினஸ் மென்ட்டார் அவார்ட், சோஷியல் கான்சியஸ்னஸ் ஆந்த்ரபிரினர் அவார்ட், செல்ப் மேட் ஆந்த்ரபிரினர் அவார்ட், லைப் டைம் அச்சிவ்மென்ட் அவார்ட் என் ஒன்பது கேட்டகிரியின்கீழ் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டுகள் வழங்கப்படுகிறது.
சாதனைகள் ஒரு பிசினஸ்மேனின் அடையாளம், விருதுகள் அவர்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்குவதில் நாணயம் விகடன் பெருமிதம் கொள்கிறது.
சிறந்த தொழில்முனைவோர்களை கெளரவிக்கும் புதிய மேடையைக் காணத் தயாராகுங்கள். விருது வாங்கப் போகிறவர்கள் யார், யார் என்பதை அவர்கள் விருது பெறும் தருணத்தில் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்யமான பேச்சுக்களையும் இந்த வார நாணயம் விகடன் புத்தகத்தில் தவறாமல் படித்துப் பரவசமடையுங்கள்.
நிகழ்ச்சியைப் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள...
நாணயம் விகடன் ட்விட்டர் https://twitter.com/NaanayamVikatan,
நாணயம் விகடன் ஃபேஸ்புக்கில் https://www.facebook.com/NaanayamVikatan
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
தமிழகத்தில் சிறந்த தொழில்முனைவோர்களை கெளரவிக்கும் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்ட்ஸ் - 2017 #NanayamAwards2017
TAGS :
COMMENTS