[ad_1]



அதிரடிப் பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான நாஞ்சில் சம்பத், 2017-ம் ஆண்டு குறித்த நம்முடைய கேள்விகளுக்கு தன் நினைவு அடுக்குகளிலிருந்து பதில்களைக் கோத்து தருகிறார் இங்கே....


“2017-ம் ஆண்டில் உங்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்த விஷயம் எது?''

“அம்மாவை முடிசூட்டிப் பார்த்த ஆர்.கே. நகர் மக்கள், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனுக்கும் முடிசூட்டி மகிழ்ந்தார்கள்... இது ஒரு மகிழ்ச்சி. மேலும் இதே ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அன்று எனது மகள் மதிவதனிக்கு இரண்டாவதாக ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்கு லியோ டால்ஸ்டாய் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தேன். இதுவும் எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்த விஷயம்''

“2017 ஆம் ஆண்டில், உங்களுக்கு மிகவும் வேதனையளித்த விஷயம் எது?”

“நவம்பர் 30 ஆம் தேதி நடுஇரவில், கோரமாக வீசிய ஒகி புயலால், ஆரோக்கியபுரத்திலிருந்து நீரோடை வரை எங்கள் நாஞ்சில் நாட்டுக் கடற்கரை துவம்சம் செய்யப்பட்டது. 46 கிராமங்கள் இன்றும் கண்ணீரில் மிதக்கின்றன. காணமல்போன மீனவர்கள் இன்னும் கரைசேரவில்லை. ஒப்பாரியும், அழுகையும் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. கடலாடும் மீனவர்கள் மட்டுமல்லாமல், களத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் நட்டுவைத்த மரங்கள் எல்லாம் வெட்டி சாய்க்கப்பட்டதுபோல விழுந்து கிடக்கின்றன. ஓலைக்குடிசையில் வசித்த மக்களின் வீடுகள் தகர்ந்து கிடக்கின்றன. ஒகி புயல் குமரி மாவட்டத்தையே சூறையாடியிருக்கிறது. எங்கள் நம்பிக்கையில் கல்லெறிந்து, எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. இந்த ஒகி புயலால், எங்கள் குமரி மாவட்டம் இருப்பையும், இயல்பையும் இழந்ததுதான் இந்த ஆண்டில் எனக்கு மிகவும் வேதனை அளித்த விஷயம்”

“2017 ஆம் ஆண்டில், நீங்கள் அடிக்கடி கேட்ட வார்த்தை எது?”

“ஸ்லீப்பர் செல்” 

“2017 ஆம் ஆண்டில், உங்களுக்குப் பிடித்த ஒருவர்?”

“இந்த ஆண்டில் எனக்குப் பிடித்த ஒருவர் என்றால், 'தீரன்' படத்தில், கதாநாயகனாக வந்த தம்பி கார்த்தி'' 

“2017 ஆம் ஆண்டில், உங்களுக்கு  எரிச்சலூட்டிய ஒருவர் யார்?”

“தேவையில்லாமல் உயிர் வாழ்கின்ற அமைச்சர் ஜெயக்குமார்” 

“2017 ஆம் ஆண்டில், உங்களைப் பற்றியக் கிண்டலில் நீங்களே ரசித்துக்கொண்டது எதை?”

“துப்பினாலும்  துடைத்துக்கொள்வேன்” என்று சன் நியுஸில் நான் அளித்தப் பேட்டியை மக்களும் ரசித்தார்கள். நானும் ரசித்தேன்”

“2017 ஆம் ஆண்டில், நீங்கள் படித்துப் பிடித்த புத்தகம் எது?”

“எனக்கு இந்த வருடத்தில் பிடித்தப் புத்தகம் மால்கம் கிளாட்வெல் எழுதிய 'டேவிட்டும் கோலியாத்தும்'. தமிழில் சித்தார்த்தன் சுந்தரம் மொழிபெயர்த்து எழுதியிருந்தார். பின்தங்கியவர்கள், பொருளற்றவர்கள் பேராற்றால் வாய்ந்தவர்களின் போராட்டங்களைச் சித்திரித்திருந்த அந்தப் புத்தகம் என்னைப் புரட்டிப்போட்டது'' 

“2107 ஆம் ஆண்டை ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால்... என்னவாக இருக்கும்?”

“நம்பிக்கைத் துரோகிகளை, நயவஞ்சகர்களை, காட்டிக்கொடுக்கின்ற எட்டப்பர்களை இந்த மண்  சுமந்து கொண்டிருக்கிறதே என்பதுதான்” 

“2018 ஆம் ஆண்டு உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள நீங்கள் உச்சரிக்கப் போகும் மந்திரம் என்ன?”


“ 'கருமம் செய்து கண்ணோடவல்லார்க்கு இல்லை ஒரு துன்பம்' என்பதை உறுதியாக ஏற்கிறேன்!''
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");