[ad_1]
2016-ம் ஆண்டின் இறுதியில் நிகழ்த்தப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களின் முன் மணிக்கணக்கில் நின்று பணத்தை எடுப்பதில் இருந்த தடைகள் அகன்று நெகிழ்வுத்தன்மை வருவதற்குள் 2017-ம் ஆண்டு தொடங்கிவிட்டது. 2017-ம் ஆண்டின் தொடக்கமே பொருளாதார ரீதியாகவும் வணிக ரீதியாகவும் குழப்பமாக இருந்தது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையிலிருந்து ஓரளவு மீண்டுவரும்போதே ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தத் தொடங்கியது.
இந்த ஜி.எஸ்.டி-யானது, இன்று நேற்று யோசித்ததல்ல; 2006-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, வாஜ்பாய் தலைமையிலான அரசால் `நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு' என்ற நோக்கத்துடன் அச்சாரமிடப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் சற்று தள்ளிப்போனது. ஆனால், ஜி.எஸ்.டி-க்கு முந்தைய வெர்ஷனான `மதிப்புக் கூட்டு வரி'யானது (வாட்) 2005 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்தே இந்தியாவில் பயன்பாட்டில் இருந்துவந்தது. 21 மாநிலங்களில் மட்டும் இது அமலுக்கு வந்தது. இன்னொரு பக்கம், ஜி.எஸ்.டி கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்துவந்தன.
ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தது. அதைக் கொண்டுவருவதற்காக, 2011-ம் ஆண்டு மார்ச்சில் மக்களவையில் அரசியலமைப்புத் திருத்த சட்ட மசோதாவை காங்கிரஸ் அரசு தாக்கல் செய்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்தன. காங்கிரஸுக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றும் அளவுக்குப் பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறவில்லை. 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த ஜி.எஸ்.டி-யை எதிர்த்த மோடி தலைமையிலான பா.ஜ.க-வே, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியதும், இதே ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதற்கான வேலையில் இறங்கியது.
2014, டிசம்பர் 19-ம் தேதியன்று, அரசியலமைப்புத் திருத்த சட்டமசோதாவானது மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. எனினும், தொடர் முயற்சியின் காரணமாகவும், தனக்கு இருந்த பெரும்பான்மை பலத்தின் காரணமாகவும், 2015, ஏப்ரலில் மக்களவையில் இந்த அரசியலமைப்புத் திருத்த சட்டமசோதா வெற்றிபெற்றது. அடுத்ததாக மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிந்தது. எனவே, எதிர்க்கட்சிகளை ஒத்துழைக்கவைப்பதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைந்த ஒரு கமிட்டி 2015, மே 14-ம் தேதி அமைக்கப்பட்டு, ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டன. இடைப்பட்ட நாளில் ராஜ்ய சபாவிலும் மத்திய அரசுக்கு எம்.பி-க்களின் பலம் அதிகரிக்கும் வகையில் சில தேர்தல் முடிவுகள் அமையவே, மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி அமல்படுத்துவதற்கான துணிவு வந்தது. அதையடுத்து, அரசியலமைப்புத் திருத்த சட்டமசோதா, 2016, ஆகஸ்ட் 3-ம் தேதி மாநிலங்களவையிலும், 2016, ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சி.ஜி.எஸ்.டி., ஐ.ஜி.எஸ்.டி., யூ.டி.ஜி.எஸ்.டி., மாநிலங்களுக்கான இழப்பீட்டு மசோதா ஆகியவை, மக்களவையில் 2017, மார்ச் 29-ம் தேதியிலும், மாநிலங்களவையில் 2017, ஏப்ரல் 6-ம் தேதியிலும் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு 2017, ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி வரியானது முறையாக அமல்படுத்தப்பட்டது. 5%, 12%, 18%, 28% என நான்காகப் பிரிக்கப்பட்டு, அனைத்தும் இவற்றுக்குள் முறைப்படுத்தப்பட்டன. வணிகர்களிடத்திலும் மக்களிடத்திலும் பல்வேறு கேள்விகள், வரிக்குறைப்புக்கான, வரி நீக்கத்துக்கான கோரிக்கைகள் எழுந்ததால் அதை அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுசெல்ல www.gst.gov.in என்ற இணையமும், மத்திய நிதியமைச்சரின் தலைமையில் மாநில அமைச்சர்களையும் உள்ளடக்கி ஜி.எஸ்.டி கவுன்சில் அமைப்பும் கொண்டுவரப்பட்டன.
இந்த கவுன்சிலானது தொடர்ச்சியாகக் கூடி விவாதித்து, தேவையான மாற்றங்களை ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றும். அந்த ஓட்டெடுப்பில் 1/3 பங்கு மத்திய அரசின் பங்காகவும், 2/3 பங்கு மாநில அரசின் பங்காகவும் இருக்கும். ஒரு கோரிக்கைக்கு நான்கில் மூன்று பங்கு வாக்குகள் கிடைத்தால், அது நிறைவேற்றப்படும். இவ்விதமாகச் செயல்பட்டு அவ்வப்போது மாற்றங்களைச் செய்துவருகிறது. இந்த ஜி.எஸ்.டி-யால் சிறுவணிகர்களும் மக்களும் பல்வேறு குழப்பங்களையும் இழப்புகளையும் சந்தித்தாலும், `இவை அனைத்தும் தற்காலிகமே!' என மத்திய அரசால் கூறப்படுகிறது. எனவே, இந்த வரிவிதிப்பால் ஏற்படும் வணிக மாற்றங்களும் வாழ்வியல் தாக்கமும், பிறக்கவிருக்கும் 2018-ம் ஆண்டிலும் தொடரும் என்பது நிபுணர்களின் கருத்து.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஜி.எஸ்.டி... 2017-ம் ஆண்டின் முக்கியமான வரி சீரமைப்பு?! #2017Rewind
TAGS :
COMMENTS