[ad_1]
Chennai:
பகுதி 1 I பகுதி 2 I பகுதி 3 I பகுதி 4 I பகுதி 5 I பகுதி 6
2017-ம் ஆண்டு காலண்டரில் இன்னும் மூன்றே காகிதங்கள்தாம் மிச்சமிருக்கின்றன. எனவே, சம்பிரதாயப்படி டாப் 10 பட்டியல் ஒன்றைப் போட்டுவிடுவோம். WWE-ல் இந்த ஆண்டு நடந்த மறக்க முடியாத டாப் 10 தருணங்கள் இதோ...
லிங்கர் நம்பர் 10:
`எப்படியும் வருவாப்டி' எனத் தெரியும். ஆனால், எப்போது வருவார், எப்படி வருவார் என்றுதான் எல்லோருமே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். டை லிங்கர், NXT-ன் சூப்பர்ஸ்டார். அவர் அரங்குக்குள் காலடி எடுத்துவைத்தாலே பத்து விரல்களையும் காட்டி `டென்... டென்...' என உரக்கக் கத்தி ரசிகர்கள் உற்சாகமாகிவிடுவார்கள். மனிதருக்கு இப்போதே அத்தனை ரசிகர்கள். `பத்து' மேட்டரைக் கச்சிதமாகக் கவ்விக்கொண்ட WWE நிர்வாகம், இந்த ஆண்டு நடந்த `ராயல் ரம்பிள்' போட்டியில் பத்தாவது ஆளாகவே லிங்கரை இறக்கிவிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தாறுமாறு என்ட்ரி!
வயலினும் நாக்கமுராவும் :
ப்ரோ ரெஸ்லிங் உலகின் மாவீரன், ஷின்ஷுகே நாக்கமுரா. NXT பயணத்தை முடித்துவிட்டு WWE-ல் அறிமுகமான அந்தத் தருணம், மனதை மயக்கும் சுகானுபவம். நாக்கமுராவின் தீம் இசையை வயலின் இசைக்கலைஞர் வாசித்து ஆரம்பித்துவைக்க, மிளிரும் மின்விளக்குகளின் மத்தியில் கெத்தாக வந்து நின்றார் `கிங் ஆஃப் ஸ்ட்ராங் ஸ்டைல்' ஷின்ஷுகே நாக்கமுரா. சிவப்பு வண்ண ஆடையோடு தீம் இசைக்கு நாக்கமுரா ஆடிய நடனத்தில் அத்தனை ஸ்டைல், அத்தனை கிரேஸ். வயலினின் நரம்புகள் பார்வையாளர்களின் செவி நரம்புகளோடு இணைந்து இசைக்கும்போது அதிர்ந்ததில், பெரும்பாலான ரசிகர்கள் சிலிர்த்துப்போய் கண்கள் குளமாகின. கிங் ஆஃப் ஸ்ட்ராங் ஸ்டைல்னா சும்மாவா!
<br />
ரெஸ்ட் இன் ஹோம் :
33 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது இந்த ஆண்டில்தான். மார்க் காலவே தனது `அண்டர்டேக்கர்' அடையாளத்துக்கு ஓய்வுகொடுத்தது இந்த ஆண்டில்தான். ரெஸ்டில்மேனியா போட்டிகளில் 21 வருடங்களாக 21-0 என விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டு ஜெயித்த வந்த அண்டர்டேக்கர், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிராக் லெஸ்னரிடம் தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த ஆண்டோ, ரோமன் ரெய்ன்ஸிடம் தோல்வியடைந்து, அன்றே தனது ஓய்வையும் அறிவித்து ரசிகர்களை அழ வைத்தார். எந்த ஒரு ரசிகனாலும் மறக்கவே முடியாத தருணம் அது. மிஸ் யூ அண்டர்டேக்கர், லவ் யூ!
ஷீல்டு 2.0 :
`ஷீல்டு எப்போது மறுபடியும் ஒன்றுசேரும்' என, பலரும் வெறித்தனமான வெயிட்டிங் மோடில் இருந்தார்கள். வெயிட்டிங்கில் இருந்தவர்களின் தொண்டையில் வெண்ணெய்யை இறக்கியதைப்போல இந்த ஆண்டே ரீயூனியன் ஆகிக் குளிரூட்டினார்கள் ஷீல்டு அணியினர். அவர்கள் ஒவ்வொருவராக தீம் மியூசிக்கோடு வந்து நின்று, மீண்டும் ஒன்றுசேர்ந்தது தாறுமாறான தருணம். 2017-ம் ஆண்டில் ரசிகர்களிடமிருந்து பெரிய கரகோஷத்தை எழுப்பிய நிகழ்வுகளில் முதன்மையானது அந்த நிகழ்வுதான். டீன் அம்ப்ரோஸும் ராலின்ஸும் ரோமன் ரெய்ன்ஸும் சேர்ந்தா மாஸு, எதிர்த்து நின்னா எவனும் தூசு என்பதை மணிக்கு ஒருமுறை நிரூபித்துவருகிறார்கள் மூவரும்.
இந்தியா டூர் :
2017-ம் ஆண்டு, இந்திய ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த மாதத்தின் ஆரம்பத்தில் WWE நிறுவனம் இந்தியாவுக்கு டூர் அடித்து, ரெஸ்லிங் போட்டி நடத்தியது. `ஒருமுறையேனும் நேரில் பார்த்துவிட மாட்டோமா!' எனத் தவமாய் தவமிருந்தவர்கள் பலருக்கும் வரமாய் அமைந்தது இந்தச் சுற்றுப்பயணம். ரோமன் ரெய்ன்ஸ், டீன் அம்ப்ரோஸ், செத் ராலின்ஸ் என இந்தத் தலைமுறை வீரர்கள் எல்லோரும் ஆப்சன்ட் ஆகாமல் அட்டெண்டன்ஸ் போட, நம் ஊர் ரசிகர்கள் ஹேப்பியோ ஹேப்பி! ஜிந்தர் மஹாலுடன் சண்டையை முடித்துவிட்டு அவரோடு சேர்ந்து டிரிப்பிள் ஹெச் ஆடிய பஞ்சாபி நடனம், இந்திய ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலான தருணம்.
காதல் கண்கட்டுதே:
நீண்ட நாள்களாக டேட்டிங்கிலேயே இருந்தார்கள் ஜான் செனாவும் நிக்கி பெல்லாவும். இந்த ஆண்டு நடந்த ரெஸ்லிங்மேனியா நிகழ்ச்சியில்தான் மோதிரத்தை நீட்டி `என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா, ஓகேவா கண்மணியே?' என நிக்கியிடம் ப்ரொபோஸ் செய்தார் ஜான் செனா. ப்ரொபோசலைக் கேட்டதும் நிக்கி அழ, நிக்கியைப் பார்த்து ஜான் செனா அழ, இருவரையும் பார்த்து ஒட்டுமொத்த அரங்கமே அழ... அந்த இடமே கண்ணீரில் மூழ்கியது. அத்தனை பேரை அசால்டாக எதிர்த்து நின்றாலும் கூலாக நிற்கும் ஜான் செனாவுக்கு, மோதிரம் மாட்டிவிடும்போது கை நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. எல்லாம் காதலின் பவர்!
<br />
பாய்ஸ் ஆர் பேக் :
ஆட்டிட்யூட் எரா காலத்து அண்ணன் - தம்பி ஜோடி, `ஹார்டி பாய்ஸ்'. ஜெஃப் ஹார்டியும் மாட் ஹார்டியும் கூட்டாகவும் தனியாகவும் களத்தில் கலக்கலான பர்ஃபாமன்ஸ்களைத் தந்திருக்கிறார்கள். சுறுசுறுப்பு கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் ஹார்டி பாய்ஸுக்கு ரசிகர்களும் எக்கச்சக்கம். ஏணி மேட்ச்களில் அடிச்சுக்க ஆளே கிடையாது. பல ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டு ரெஸ்லிங்மேனியாவில் மீண்டும் காலடி எடுத்துவைத்தார்கள். ரசிகர்களுக்கு பேரின்பதிர்ச்சி. அந்த மேட்சில் வென்று சாம்பியன்களாகிகூட கொஞ்சம் அதகளப்படுத்தினார்கள்! ஹார்டி பாய்ஸ் ஆர் பேக்...
இவர் ஃபினாமினல் :
இந்த ஆண்டு ஏஜே ஸ்டைல்ஸ் சண்டையிட்ட முக்கால்வாசி மேட்சுகள் செம. க்றிஸ் ஜெரிக்கோ ரிட்டர்ன் ஆனபோது, `யுஎஸ் சாம்பியன்ஷிப்'புக்கு நடந்த டிரிப்பிள் த்ரெட் மேட்ச், பிராக் லெஸ்னரோடு நடந்த மேட்ச், ஜிந்தர் மஹாலோடு நடந்த சாம்பியன்ஷிப் மேட்ச், ஃபின் பேலரோடு நடந்த மேட்ச் எல்லாம் இந்த ஆண்டின் மிக முக்கியமான சண்டைகள். ஒவ்வொரு மேட்சிலும் மறக்க முடியாத மொமென்ட் ஒன்றைத் தந்திருக்கிறார் மனிதர். அவற்றில் பெஸ்ட், புராக் லெஸ்னருக்கு அடித்த 450 ஸ்ப்லாஷ். உண்மையிலேயே, ஏஜே ஸ்டைல்ஸ் ஃபினாமினல்தான்.
இதோடு புராவ்ன் ஸ்ட்ரொவ்மேன், ரோமன் ரெய்ன்ஸ் படுத்திருந்த ஆம்புலன்ஸை ஒற்றை ஆளாகக் கவிழ்த்து மெர்சலாக்கிய தருணத்தையும் நியூடே மற்றும் உஷோஸின் ராப் போட்டியையும் சேர்த்துக்குவோம் மக்களே!
அடுத்த பகுதியில் WWE-ன் மிகப் பிரபலமான PPV நிகழ்ச்சியான ராயல் ரம்பிளைப் பற்றி அலசி ஆராய்வோம்!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
அண்டர்டேக்கரின் ஓய்வு, ஜான் செனாவின் ப்ரொபோசல்! - 2017-ன் டாப் 10 WWE தருணங்கள் - WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 6 #2017Rewind
TAGS :
COMMENTS