[ad_1]
Kanniyakumari:
கடந்த மாதம் 30-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் மாவட்டம் முழுவதும் உருக்குலைந்தது. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மற்றும் கரை திரும்பிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். அவர்களை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் எந்தவொரு முனைப்பும் காட்டாததால், மீனவ மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், கடற்கரைக் கிராமங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன.8 கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 618 மீனவர்களை இன்னும் மீட்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கு, கேரள அரசு வழங்கியது போல நிவாரணங்களை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை மீனவர்கள் முன் வைத்துப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை கடலில் காணாமல்போன தமிழக மீனவர்கள் பட்டியல் மட்டும் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்களோடு படகில் மீன்பிடிக்கச் சென்ற வட இந்தியத் தொழிலாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியாகவில்லை. வட இந்தியத் தொழிலாளர்கள் எத்தனை பேர் கடலில் மாயமானார்கள் என்கிற விவரம் மீனவ கிராமங்களுக்குக்கூட இன்னும் தெரியவில்லை. சுமார் 200 வட இந்தியத் தொழிலாளர்கள் வரை கடலில் மாயமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஒகி புயலால் வட இந்தியத் தொழிலாளர்கள் 200 பேர் மாயம்?
TAGS :
COMMENTS