[ad_1]



உதகை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க-வின் வரலாறு தெரியவில்லை. எத்தனை பேர் கழகத்துக்காக உயிர்தியாகம் செய்துள்ளார்கள் என்பது அவருக்குத் தெரியாது. அம்மாவிடம் அவர்தான் என்னை அறிமுகப்படுத்தியதாகத் தினகரன் கூறிவருகிறார். அவர் 1999-ம் ஆண்டுதான் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால், அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பெரியகுளம் தொகுதியில், வார்டு பிரதிநிதியாக இருந்தேன். அதன்பிறகு, படிப்படியாகக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளேன்.அப்போது எனக்கு 19 வயது. தினகரன் அப்போதுதான் எல்.கே.ஜி படித்துக்கொண்டிருந்தார். என்னுடைய பணிகளைப் பார்த்துதான் அம்மா என்னை அழைத்துப் பேசினார். ஒருகட்டத்தில் தினகரனைப் பெரியகுளம் தொகுதிக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழையக் கூடாது என அம்மா உத்தரவிட்டார். துரோகம் செய்ததற்காக அவர்களின் குடும்பத்தையே கூண்டோடு அம்மா விரட்டியடித்தார். ஆக, துரோகம் செய்தது யார். நாங்கள் அசந்த நேரம் பார்த்து, ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இனி நாங்கள் ஒருபோதும் அசரவே மாட்டோம். காளை கன்றுக்குட்டி போட்டாலும் கழகத்தை ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.



 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");