[ad_1]





Salem: 

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்வைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டு அரசுகளை விமர்சனம் செய்தார்கள்.


இதில் பேசிய தலைவர்கள், ''மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. தொழிலாளர் வர்க்கமும் உழைப்பாளி மக்களும் நாளும் ஏறி வரும் விலைவாசிக் கொடுமையால் சொல்லொண்ணாத் துயரங்களில் சிக்கி அல்லல்படுகின்றனர். விலைவாசி தானாக உயரவில்லை. இடைத்தரகர்கள், பெரும் வணிகர்கள், கறுப்பு சந்தையினர் மற்றும் ஊகவணிகம் நடத்தி கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களுக்கு சாதகமான கொள்கைகளை அரசு அமலாக்கி வருவதே விலைவாசி உயர்வுக்கு முழுக்காரணம். மத்திய அரசும் அது பின்பற்றும் நாசகர பொருளாதாரக் கொள்கைகளும் விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்கிறது.

தமிழக அரசும் தன் பங்கிற்கு மோடி அரசுக்குத் தாளம் போடுவதை மட்டுமே கடமையாகச் செய்கிறது. உணவு தானியங்கள், காய்கறிகள், போக்குவரத்து மற்றும் மருத்துவ சேவைகள், மருந்துகள், கல்வி என அனைத்து அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்த வண்ணம் உள்ளன. சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆதாருடன் ரேஷன்கார்டை இணைக்காத பாமர மக்களுக்கு பொது விநியோக முறை மூலம் எதுவும் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்புச் சட்டம் என்பது கேலிக் கூத்தாக உள்ளது. சர்க்கரை மீதான அரசு மானியம் வாபஸ் பெறப்பட்டதால் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ ரூ.25 என உயர்ந்துவிட்டது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்துள்ள போதிலும், அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதற்குப் பதிலாக, கலால் வரி என்ற பெயரால் அரசு கொள்ளையடிக்கிறது. இது அத்தியாவசியப் பண்டங்களின் விலை உயர்வுக்கு சங்கிலித் தொடர்போல காரணமாகிறது'' என்றார்கள்.


 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");