[ad_1]
சபரிமலை அய்யப்பன் கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் மாதம் 15-ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின்னர் பூஜைகள் நடைபெற்று வந்தன. டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். மண்டல பூஜைக்குப் பின் டிசம்பர் 26-ம் தேதி இரவு 11 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தந்திரி கண்டரரு, மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிக்கிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்தார். வரும் 14-ம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நிகழ்கிறது.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். இப்போதே பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். பம்பை, சபரிமலை, எரிமேலி, நிலக்கல் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகரவிளக்கு பூஜைக்குப் பின்னர் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை படி பூஜை நடக்கிறது. 20-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலையில் ஜனவரி 14-ம் தேதி மகரஜோதி!
TAGS :
COMMENTS