[ad_1]





மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் உயிரிழந்தனர். 




சேனாபதி மார்க் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் நள்ளிரவு நேரத்தில் தீப்பிடித்ததாகவும், இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு நள்ளிரவு 12.30 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டதாகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பிறந்தநாளைக் கொண்டாடிய 28 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்த தீ விபத்தில் 14 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சேனாபதி மார்க் பகுதியில் உள்ள அந்த கட்டடத்தில் செயல்பட்டுவந்த உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



 


இந்த தீ விபத்தால் அருகில் இருந்த கட்டடங்களில் செயல்பட்டு வந்த டைம்ஸ் நவ், ஈ.டி. நவ், ஜூம் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு பாதிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");