[ad_1]





Chennai: மீனவர்களுக்கு ஆதரவாக வருகிற 13-ம் தேதி குமரி மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.





திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில், 'ஒகி புயலில் சிக்கி மாயமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி இதுவரை என்னவென்று தெரியவில்லை. மத்திய மாநில அரசுகள் மெத்தனமாக இருந்துவருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்பதற்கு மத்திய மநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் தேதி புதன்கிழமை காலையில் கன்னியாகுமரியில் கவன ஈர்ப்புப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.ஒகி புயல் குறித்து உரிய முன்னறிவிப்பை மத்திய மாநில அரசுகள் செய்திருந்தால் இந்த அளவுக்கு மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அவர்கள் கடலுக்குத் தொழில் செய்யச் சென்றிருக்கமாட்டார்கள். புயல் தாக்கி இத்தனை நாட்கள் ஆகியும் காணாமல் போன மீனவர்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. மாநில அரசு வலியுறுத்தியும்கூட குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்துகிறது. இது கண்டனத்துக்குரியது' என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");