[ad_1]





இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது 10-வது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் கானாவின் எர்னெஸ்ட் அமுஜூவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதுவரை இவர் பங்கேற்ற 10 தொழில்முறை குத்துச்சண்டையிலும் தொடர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில், ஆசிய பசிபிக் மற்றும் ஓரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனான விஜேந்தர்சிங், ஒரியன்டல் சூப்பர் மிடில் வெயிட் சாம்பியனான, கானா நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்ட் அமுஜுவுடன் மோதினார். 'ராஜஸ்தான் ரம்பிள்' என இப்போட்டி அழைக்கப்பட்டது. இது மொத்தம் 10 சுற்றுகளாக நடந்தது. 34 வயதான எர்னெஸ்ட் அமுஜூ இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 23-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டவர். அமுஜு அபாயகரமான வீரர் என அறியப்பட்டதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால், முதல் சுற்று முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் விஜேந்தர்சிங். ஐந்தாவது சுற்றில் அமுஜுவின் பன்ச், விஜேந்தரின் நெற்றியை பதம் பார்த்தது. இருந்தும் சுதாரித்துக்கொண்டு மோதினார் அவர். 10-வது சுற்றின் முடிவில் விஜேந்தர் சிங் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். போட்டிக்கு முன்பு பேட்டியளித்திருந்த அமுஜூ, ‘3 அல்லது 4-வது சுற்றிலேயே விஜேந்தரை நாக்-அவுட் செய்து வீழ்த்துவேன்’ என பேசியிருந்தார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");