[ad_1]
Nellai: உலக கழிவறை தினம், நாளை கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், நெல்லையில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள், கழிவறைச் சுவர்களில் ஓவியம் வரைந்து அசத்தினார்கள்.
ஐ.நா அறிவிப்புக்கிணங்க, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 19-ம் தேதி, உலக கழிவறை தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. உலக அளவில், இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிவறை வசதி இல்லாமல் திறந்தவெளியைப் பயன்படுத்திவருகிறார்கள். தமிழகத்தின் நிலைமையும் மோசமானதாகவே இருக்கிறது. திறந்தவெளியில் பயன்படுத்தும் கழிப்பறைமூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் இருக்கிறது.
அத்துடன், திறந்தவெளிக் கழிவறைகளால் 50 கொடிய நோய்கள் பரவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. யுனிசெஃப் அறிக்கையின்படி, உலக அளவில் ஒருநாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆறில் ஒரு பெண்குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பைத் தொடரமுடியாமல் பாதியிலேயே நிறுத்திவிடும் அவலம் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களிடம் கழிவறையின் உபயோகம்குறித்து விளக்கும் வகையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறையின் சுற்றுச்சுவர்களில் வண்ண மயமான ஓவியங்களை வரைந்துள்ளனர். இதுபற்றி ஆசிரியர்கள் கூறுகையில், ’மாணவர்களிடம் கழிவறையைப் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரிக்கவே, இந்த முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.
சுத்தம், சுகாதாரம், தூய்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாணவர்கள் மூலமாகவே இந்த ஓவியங்கள் வரைவதுதான் கூடுதல் சிறப்பு. இதன் மூலமாக, மாணவர்களுக்கு கழிவறையின் அவசியம்குறித்த விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது’’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நாளை, உலக கழிவறை தினம்! - ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள் | #World toilet day
TAGS :
COMMENTS