[ad_1]

Coimbatore: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, அனுமதியின்றி வைக்கப்பட்ட அலங்கார வளைவு மோதி, இளைஞர் ரகு உயிரிழந்த சம்பவம் கோவையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.




கோவையில், வருகின்ற டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொன்னது. இதனால் பேனர், கட் அவுட்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேனர், கட் அவுட்களின் எண்ணிக்கை குறையவில்லை.

கோவை, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றிற்கு முறையாக அனுமதிக்கூட பெறவில்லை. ஆனால், இந்த விஷயத்தை மாநகராட்சி நிர்வாகம் உணர்வதற்குள், ஓர் உயிர் பலியாகியுள்ளது.



ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ரகுபதி. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். திருமண பேச்சுவார்த்தைக்காக கோவை வந்தவர், பழனி கோயில் செல்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு, பைக்கில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அனுமதியின்றி வைக்கப்பட்ட, அலங்கார வளைவு மோதி, ரகு கீழே விழுந்தார். அவர் எழுவதற்குள், எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே ரகு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, எதிர்ப்புகள் எழவே, அவசர அவசரமாக, அந்த அலங்கார வளைவுகளை, கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.



வளைவுகள் அகற்றப்பட்டாலும், ரகு உறவினர்களின் வேதனையையோ, வலியையோ இவர்களால் அகற்ற முடியவில்லை. அதேபோல, பொதுமக்களின் இந்தச் சம்பவத்தால் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். ரகு உயிரிழந்த இடத்திலேயே Who Killed Ragu (ரகுவை கொன்றது யாரு) என எதியுள்ளனர். சமூகவலைதளங்களிலும்  #WhoKilledRagu என்ற ஹேஷ் டேக்கில், மாநகராட்சி மற்றும் அரசை விமர்சித்து, கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");