[ad_1]

 


Madurai: 

 

மதுரை மேலூரை அடுத்த மேலவளவு கிராமத்தில், அரசு துவக்கப் பள்ளி ஒன்று உள்ளது.  அந்தப் பள்ளி அருகில், செயல்படாத தண்ணீர் டேங் ஒன்றும் உள்ளது . அந்த தண்ணீர் டேங் மிகவும் சேதமடைந்து, எப்போது சாயும் என்று தெரியாதநிலையில் உள்ளது.  அந்த செயல்படாத தண்ணீர் டேங்கை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் . இது தொடர்பாக அப்பகுதி கிராமவாசிகள் கூறுகையில், "இந்த தண்ணீர் டேங் பழுதடைந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். தொடர்ந்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  டேங் பக்கத்தில்தான் துவக்கப் பள்ளி உள்ளது. 100-க்கும் அதிகமான மாணவர்கள் தினமும் ஓடி ஆடி விளையாடுகின்றனர். ஆனால், இந்த டேங் எப்போது விழும் என்று தெரியவில்லை




ஆபத்து நிகழ்ந்ததற்குப் பின் நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும் முன் கூட்டியே நடவடிக்கை எடுப்பது நல்லது . மேலும் மேலவளவில் தண்ணீர் இல்லாத கிணறுகளும் உள்ளன.  அதில், பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டிவருகின்றனர். தண்ணீர் இல்லாத கிணற்றில் யாரேனும் தவறி விழுந்துவிட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, கிணற்றையும் மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டனர் .

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");