[ad_1]
சென்னை மெரினா கடற்கரையில் அரசியல் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நினைவிடங்களாக மட்டுமில்லாமல், காதலர்களுக்கான பூங்காவாகவும், கடற்கரைக்கு வருகிறவர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும் உள்ளன. எனவே, இந்த நினைவிடங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தன் மனுவில், "மெரினாவில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு அனுமதித்துள்ளது. கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்குள் எந்தவிதக் கட்டுமானங்களும் இருக்கக் கூடாது என்பது விதியாகும். எனவே, அரசியல் தலைவர்களின் நினைவிடங்களை வேறுஇடத்திற்கு மாற்றவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். தலைவர்களின் நினைவிடங்கள் தொடர்பாக, விகடன் இணைய தளத்தில் சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான பதிகளும் கீழே...
4) நினைவிடங்களை இடமாற்றம் செய்தால், வேறு எந்த இடங்களுக்கு மாற்றலாம் என்ற உங்கள் கருத்தைப் பதியுங்கள்...
*அனைத்து தலைவர்களின் நினைவிடங்களையும் ஒரே இடத்தில் வைத்து பராமரிக்கலாம்.
*அவர்களுடைய வீட்டிற்குள் வைக்கவேண்டியதுதானே
*காலம் சென்ற மனிதர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த வழக்கு தேவையற்றது.
*அவர்களுடைய கட்சிக்கு சொந்தமான இடத்தில்
*Already happened is happened. In future has to properly plan.
*இடம் மாற்றம் செய்ய தேவையில்லை.. வரும் காலத்தில் வேண்டுமானால் இனிமேல் யாரையும் கடற்கரையில் அடக்கம் செய்யாமல் இருக்கலாம்..
*மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைக்கலாம்
*நினைவிடங்களை கட்சியின் தலைமை அலுவலக வளாகங்களில் இடமாற்றம் செய்தால் அக்கட்சித்தொண்டர்களுக்கும் அதன் தலைவர்கள் திடீர் தியானம் செய்வதற்க்கும் பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமலிருக்கும்.
*தேவையில்லா ஒரு விசயத்துக்கு மக்கள் வரிப்பணம் செலவு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மக்களின் அத்தியாச தேவைக்கே பணம் இல்லை எனும்போது வாழும் போதும் மறைந்த பின்னும் மக்கள் பணம் இவர்களுக்கு விரையம் செய்வது மிகப்பெரும் தவறு.
*அரசியல் தலைவர்களுக்கு நினைவிடம் தேவையில்லை
*நினைவிடங்கள் தேவையற்றது. பதிலாக அவர்கள் பெயர்களில் நூலகங்களை அமைக்கலாம்; சமூகப் பணிகளை மேற்கொள்ளலாம்.
*நெஞ்சினில் நின்கின்றால் போல் மக்களுக்கு நன்மை செய்தால் மக்கள் மனதில் நீங்கா நினைவிடம் கிடைக்கும்.
*கண்டிப்பாக இடமாற்றம் கூடாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“தலைவர்கள் சமாதிக்குப் பதில் நூலகங்கள் அமைக்கலாம்!” - நினைவகங்களுக்கு மாற்று சொல்லும் வாசகர்கள் #VikatanSurveyResults | "Libraries can be set up in honor of political leaders"
TAGS :
COMMENTS