[ad_1]
ஆர்.டி.ஓ அலுவலகக் கட்டடங்கள் இடிந்துவிழும் நிலையில் இருப்பதைக் கணக்கில் கொள்ளாமல் கணினிகளை நவீனப்படுத்தி என்ன பயன்? ஆர்.டி.ஓ அலுவலகத்தின் கணினிகளோடு ஆவணங்களும் மழைவெள்ளத்தில் பாழாகிக்கொண்டிருக்கின்றன. சென்னையில் பல ஆர்.டி.ஓ அலுவலகங்கள், இதே கதியில்தான் இருக்கின்றன. ஓட்டுநர் உரிமம் பெற வருகிறவர்களின் சிரமத்தைப் போக்கும் விதமான தொழில்நுட்பங்களில் அண்மைக்காலமாகத் துறை அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தக் கவனம் யாவுமே, 'பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்' என்ற ரீதியில்தான் இருக்கிறது. சென்னையின் முக்கிய ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஒன்றாகக் கருதப்படும் அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குப் போகும் பொதுமக்களும் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் 'திக்... திக்...' மனநிலையில்தான் இருக்கின்றனர். எந்தப் பகுதி, எந்த நேரத்தில் இடிந்துவிழுமோ என்ற அச்சம் அவர்களை மிரட்டிப் பார்க்கிறது.
ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர் ஒருவர், "கட்டடத்தைச் சீரமைக்கப் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவர், 'வொர்க் ஆர்டர்' எடுத்துள்ளதாக ஆண்டுக்கணக்கில் சொல்லி வருகிறார்கள். அந்த ஒப்பந்ததாரர் கட்டடப் பணியைத் தொடங்குவதற்குள் ஆர்.டி.ஓ அலுவலகம் எந்தக் கதிக்குப் போகுமோ தெரியவில்லை" என்றார். தமிழகத்தில் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ) உள்ளன. நாளொன்றுக்கு, மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். இதில், அதிகமானோர் சென்னையில்தான் ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். ஓட்டுநர் உரிமம் பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, குஜராத் மாநிலங்களில் இதற்கான தீர்வாக நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டது. தமிழகத்திலும் அதே நவீனத்தைக் கொண்டுவரும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அந்த வகையில், சென்னையில் 14 ஆர்.டி.ஓ அலுவலகங்களில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுவரும் வேலைகள் நடக்கின்றன. இத்தனை வசதிகளைச் செய்த அதிகாரிகள், தொழில்நுட்பத்துக்கு அடித்தளமான, கணினிகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் முற்றிலும் கோட்டைவிட்டுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஓட்டுநர் உரிமம் பெற வருகிறவர், வாகனத்தைச் சரியாக ஓட்டினாரா என்பதைக் கண்டுபிடிக்கும் விதமாக ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் 'டெஸ்ட் ட்ராக்'குகள் பொருத்தப்படும். அதை சென்சார் கருவிகள், கணினியில் பதிவு செய்துகொள்ளும். இதற்காக ஆர்.டி.ஓ அலுவலகத் தரைப் பகுதியில் அதிநவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு, அவை ஆர்.டி.ஓ அலுவலகக் கணினியுடன் இணைக்கப்படும். அங்கிருந்து மொத்த விவரமும் பெறப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெறச் சம்பந்தப்பட்ட நபர் தகுதியானவரா என்பது முடிவு செய்யப்படும்" என்றார். எல்லாம் சரிதான், ஆபீஸர் சார்... மழைநீரில் உங்களோடு சேர்ந்து கணினியும் நனைகிறது. பொதுமக்களின் மொத்த ஆவணங்களும் உங்களிடம்தான் இருக்கின்றன. 'அனைத்து ஆவணங்களும் மழைநீரில் நனைந்துவிட்டன' என்று பொதுமக்கள் சொல்லக்கூடிய இடம் நீதிமன்றமாக இருக்காதவரையில் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
வலுவிழந்த அண்ணாநகர் ஆர்.டி.ஓ அலுவலகம்... அலறும் ஊழியர்களும் பொதுமக்களும்! #VikatanExclusive
TAGS :
COMMENTS