[ad_1]
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கான நிதியை அளிக்க, இந்திய அளவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் ஒன்றிணைந்து களத்தில் இறங்கியுள்ளன.
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகத் தமிழர்கள் ஈடுபட்டுவந்தனர். அமெரிக்கா வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சியில் இறங்கி, நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், நிதிப் பற்றாக்குறை நிலவிவந்தது. இந்நிலையில் தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்பட்டதால், பல சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக ஆசிரியர் சங்கம் ஆகியவை தொடர்ந்து நிதி உதவி வழங்கியும் சேகரித்தும்வருகின்றனர்.
இந்த வகையில், ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் நிதி உதவி அளிக்க வேண்டும் என அனைத்து இந்திய தமிழ்ச் சங்கப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஹார்வர்டு தமிழ் சங்கத்துக்காக, தனி ஒரு நபராக முதன்முதலாக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “இந்தியாவில் பல மாநிலங்களிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் இணைந்து ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன. இதற்காக, சில தமிழ்ச் சங்கங்கள் என்னிடம் பணம் அனுப்பும் வழிமுறைகள் குறித்து விசாரித்துள்ளன. இந்த வகையில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் 2 லட்சம் ருபாய், புவனேஸ்வர் தமிழ் சங்கம் முதலில் 25 ஆயிரம் ரூபாயும் பின்னர் 50 ஆயிரம் ரூபாயும் அளிக்க முடிவுசெய்துள்ளது. மேலும், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம் 1 லட்சம் ரூபாயும் டெல்லி தமிழ்ச் சங்கம் 3 லட்சம் ரூபாயும் அளிக்க முன்வந்துள்ளன.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஹார்வர்டு தமிழ் இருக்கை: களமிறங்கும் தமிழ்ச் சங்கங்கள் #VikatanExclusive
TAGS :
COMMENTS