[ad_1]
அரசு அலுவலகங்களில் திடீரென நுழைந்து அரசு அதிகாரிகளுக்கு கிலி ஏற்படுத்துபவர் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ஆளுநர் எப்போது எந்த அலுவலகத்துக்குள் நுழைவார் எனப் புதுச்சேரி அரசு அதிகாரிகள் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டு காத்திருப்பர். தனது அதிரடி ஆக்ஷனால் மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் கிரண்பேடியின் ஸ்டைலை தற்போது தமிழக ஆளுநர் பன்வாரில் புரோகித்தும் தொடங்க உள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்க உள்ளார்.
TAGS :
COMMENTS