[ad_1]

19-ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென் பகுதிகளில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் விளைவாக 1895-ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஜான் பென்னிகுவிக்கால் கட்டப்பட்டதே முல்லைப்பெரியாறு அணை. 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, லோயர்கேம் எனும் இடத்தில் பென்னிகுவிக்கிற்கு ஒரு மணிமண்டபம் கட்டினார். பென்னிகுவிக் சிலை, அணை கட்டுமானப்பணிகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்னும் நிறைய தகவல்கள் என அணையின் மொத்த வரலாற்றையும் அந்த மணிமண்டபத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

சொத்துகளை விற்று அணை கட்டிய பென்னிகுவிக் :


அணைக் கட்டுமானத்தின் முதல் முயற்சி கடும் வெள்ளத்தால் தோல்வியில் முடிகிறது. ஒரு கட்டத்தில் அணைக் கட்டப் பணம் இல்லாமல், இங்கிலாந்தில் இருந்த தன் சொத்துகளை விற்று அணைக் கட்டுமானப் பணியில் இறங்கினார் பென்னிகுவிக். மழை, குளிர், வனவிலங்குகளில் அச்சுறுத்தல் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியில்தான் முல்லைப்பெரியாறு அணை கட்டுமானப்பணிகள் நடந்தன. பல ஆயிரம் மக்கள் தங்கள் இன்னுயிரையும் இதற்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.



சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவை உடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்டது இந்த அணை. கட்டுமானப் பொருள்களை மலையின் அடிவாரத்தில் இருந்து மேலே எடுத்துவந்து, அங்கிருந்து அணைக் கட்டும் இடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அது அத்தனை சுலபம் இல்லை.

கப்பல் கட்டிய பென்னிகுவிக் :

தண்ணீரைக் கடந்து பல டன் எடையுள்ள கட்டுமானப் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்க அதிக சிரமம் ஏற்பட்டது. உடனே, இங்கிலாந்தில் இருந்து மூலப் பொருள்களை வரவழைத்து கப்பல் ஒன்றை பிரமாண்டமாக வடிவமைத்தார் பென்னிகுவிக். அதனால் பொருள்களை சுமக்க மட்டுமே முடியும், தானாக தண்ணீரில் செல்ல முடியாது. காரணம் நீராவி இன்ஜின்களைப் பயன்படுத்தினால் அடர்வனத்தின் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும், இன்ஜின் எழுப்பும் சத்தத்தால் வன விலங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்பதற்காக இன்ஜின் இல்லாத கப்பலை வடிவமைத்தார் பென்னிகுவிக். தானாக செல்ல முடியாத கப்பலை இழுத்துச்செல்லவே இரண்டு கட்டுமரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கட்டுமானப் பொருள்கள் இருக்கும் இடங்களுக்கு கொண்டுவரப்படும் இந்தக் கப்பலில், அணைக் கட்டத் தேவையான பொருள்களை ஏற்றிவிடுவார்கள். 



பொருள்கள் ஏற்றப்பட்டவுடன் அக்கப்பலை, இரண்டு கட்டுமரங்களைக் கொண்டு இழுத்துச்சென்று அணைக் கட்டும் இடத்துக்கு கொண்டுவந்துவிடுவார்கள். தண்ணீர் ஓட்டத்தால், கப்பலில் அதிக எடை இருந்தாலும் எளிமையாக அவற்றை எடுத்துச்செல்ல முடிந்திருக்கிறது. இப்படித்தான் அணை கட்டுமானத்துக்கு அந்தக் கப்பல் உதவியது.

கேட்பார் இல்லாமல் கிடக்கும் கப்பல் :


முல்லைப்பெரியார் அணை தென் தமிழக மக்களுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்றோ அதற்கு இணையான முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டியது, அணைக் கட்ட பெரிதும் உதவிய இந்தக் கப்பல். ஆனால், இன்று அந்தக்கப்பலின் நிலை மிக மோசமாக இருக்கிறது. அணைக்குச் செல்லும் நம்மை முதலில் வரவேற்பது துரு ஏறி, புதர்களுக்குள் கிடக்கும் அந்தக் கப்பல்தான். கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்றுவிட்ட அந்தக் கப்பலை தமிழக அரசு உடனே மீட்டு, லோயர்கேம்பில் இருக்கும் பென்னிகுவிக் மணிமண்டபத்துக்குக் கொண்டுவந்துப் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. தமிழக அரசு இதில் முனைப்பு காட்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");