[ad_1]





”போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் வடகொரியாவையே முழுவதுமாக அழித்துவிடுவோம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.




உலக நாடுகளின் எச்சரிக்கையையும், ஐ.நா-வின் தடைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது. 
இந்த ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானுக்கும் எரிச்சலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இந்த விஷயத்தில் கடும் மோதல் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஆகியோர் மாறி மாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறார்கள்.இந்நிலையில், நேற்று வடகொரியா மீண்டுமொரு ஏவுகணையைப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. ஜப்பான் கடற்பகுதியில் இந்த ஏவுகணை வீசப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவும் இதை உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் அளித்துள்ள பேட்டியில், “தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடகவே வடகொரியா உள்ளது. அதை, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் கவனித்துவருகின்றன. இதுபோன்றதொரு இக்கட்டான நிலைமையை அமெரிக்க துணிந்து எதிர்கொள்ளும்” என்றார்.


இதையடுத்து ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வெளியிட்டுள்ள அறிக்கையில், “போர் மூளும் சூழல் ஏற்பட்டால் வடகொரியாவை முற்றிலுமாக அழித்துவிடுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");