[ad_1]





‘’இந்த ஆண்டின் சிறந்த ஜோக்கை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்’’ என்று  அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல் அடித்துள்ளார்.சமீப காலமாக, செல்லூர் ராஜுவை தெர்மக்கோல் என்று ஸ்டாலின் கிண்டலடித்துப் பேசுவதும், தி.மு.க தலைவராக அழகிரி வந்திருந்தால், நாங்கள் பயப்படுவோம் என்றும் ஸ்டாலினை மட்டம் தட்டி செல்லூர் ராஜு பேசுவதும் வழக்கமாகி வருகிறது.





இந்த நிலையில், இன்று மதுரையில் நடந்த அரசு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ‘’டெங்கு, டெங்கு என்று அரசியல் செய்தார்கள், அது போய்விட்டது. இப்போது, வெள்ளம், வெள்ளம் என்று அரசியல் செய்கிறார்கள். அதற்கும் சிறப்பான முறையில் நிவாரணப்பணிகளைச் செய்துவருகிறோம். இதைவிட கொடுமை என்னவென்றால், நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியதற்கு, தாங்கள் நீர்நிலைகளைத் தூர் வாரியதுதான் காரணமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த ஜோக் இதுதான். அதை யாராவது கேள்வி கேட்டீங்களா? மதுரைக்காரன் நான், ஏதாவது பேசினா உடனே டிவி-யில பரப்பிடுறீங்க. அதுமாதிரி  ஸ்டாலின் பேசுன ஜோக்கையும் பரப்புங்க’’ என்றார் ஜாலியாக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்