[ad_1]





Chennai: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த்தின் 67-வது பிறந்தநாள் டிசம்பர் மாதம் 12-ம் தேதி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடத்தை தொடங்கியுள்ளனர்.




நேற்று டிவிட்டரில் அவரது ரசிகர்கள் 1 MONTH FOR THALAIVAR BIRTHDAY என்ற டேக் லைன் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்களது வாழத்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் அவரது நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள `2.0' திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் அவரது பிறந்தநாளன்று 2.0 படத்தின் டிரைலர் வெளிவரலாம் என ரசிகர்கள் ட்விட்டுகளின் மூலம் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளிவந்துள்ள நிலையில் அப்படத்தின் டீசர் வெளிவரலாம் என்றும் மற்றொரு தரப்பினர் ட்வீட்டி  இருக்கிறார்கள். பெரிய நடிகர்களின் பிறந்தநாளில் வழக்கமாக அவர்கள் நடித்த படங்களின் டீசர், டிரைலர் வெளிவருவது சமீப காலமாக ட்ரெண்ட் ஆக இருப்பதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்தநாளின் போது நடிகர்  கமல்ஹாசன்  ஆப் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்