[ad_1]

தமிழக கடலோர பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை ஓய்ந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 





இது குறித்து வானிலை ஆய்வு மையம், `நவம்பர் 14-ம் தேதி முதல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளது. அதேவேளையில், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அங்கேயே நீடிப்பதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை, தொடங்கிய நாளிலிருந்தே தமிழகத்தின் பெருவாரியான இடங்களில் நல்ல மழை பொழிவை தந்துள்ளது. இந்நிலையில், மேலும் மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.