[ad_1]
தென் தமிழகத்தில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் இன்னும் இரண்டு நாள்களில் மழை குரையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகம் மற்றும் இலங்கைக்கு அருகே வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுநிலை நீடிப்பதால் புதுச்சேரி மற்றும் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 6-ம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்றும் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! | rain may likely to hit southern tamilnadu
TAGS :
COMMENTS