[ad_1]





   
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவைச் சுற்றியுள்ள மணிமுத்தாறு விருசுழியாறு பாலாறு போன்றவற்றில் 2011-ம் ஆண்டு ஆற்றில் வந்த வெள்ளத்தால் ஆற்றை ஒட்டிய விளைநிலங்கள் எல்லாம் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த விளைநிலங்கள் எல்லாம் மணல் நிறைந்த புதையல்களாக விவசாயிகளுக்கு கிடைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை சவடு மண் எடுப்பதற்காக பயன்படுத்தி வருகிறார்கள். அதற்குள் புதைந்திருக்கும் மணல்கள் தற்போது இவர்களுக்கு செல்வம் கொழிக்கும் நிலமாக மாறிவிட்டது.  இன்றைக்கு மணல் தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. தமிழக அரசு மணல் குவாரிகளுக்கு கொடுத்து வந்த லைசென்ஸ் ரத்துசெய்யப்பட்டுவிட்ட நிலையில் இதுபோன்ற மணல்களுக்கு  பெரிய அளவில் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. இந்த மணல்களை அள்ளுவதற்கு புவியியல் மற்றும் கனிமவளத்துறையில் அனுமதி கிடையாது. ஆகையால் வருவாய்த்துறை காவல்துறை கனிமவளத்துறை அதிகாரிகளின் ஒட்டு மொத்த கூட்டணியில் அரசியல்வாதிகள் இந்த மணல் தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்கள்.  இதனால் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமலும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் ஒன்றியம் மகிபாலன்பட்டி அருகே கோவிலாப்பட்டியில் விருச்சுழி ஆற்றில்  அதிக அளவு மணல் திருடிய மணல் லாரி ஜே.சி.பி பறிமுதல் செய்து விசாரணை செய்து கோட்டாச்சியரிடமோ நீதிமன்றத்திலோ ஓப்படைக்காமல் வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருக்கோட்டியூர் பகுதிகளில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட மணல் கடத்திய லாரிகளை பிடித்தது போலீஸ்.
மணல் கடத்தலுக்கு வருவாய்த்துறை, கனிமவளம் போலீஸார் உடந்தையாக இருப்பதும், அரசியல்வாதிகள் மணல் கடத்துவது பற்றியும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த தினமணி செய்தியாளர் சரவணபெருமாளுக்கு  கொலைமிரட்டல் விட்டதோடு அவரை கொலைசெய்யத் திட்டமிட்ட கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் கீழக்கோட்டையைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் கார்த்திக்கை மட்டும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். செல்வம் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் எஸ்.பியிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்